19 ஆகஸ்ட், 2017. சனிக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 3 ஏப்ரல் 2016

உலகச்செய்திகள் : Latest World News

டி 20 உலகக் கோப்பை: மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி - வீழ்ந்தது இங்கிலாந்து

கொல்கத்தா
West Indies win World T20 final - World News Headlines in Tamil

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த உலகக்கோப்பையின்  20க்கு இருபது போட்டிகளில், இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றியீட்டி சம்பியனாகியுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் சமி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஆரம்ப வீரர்கள் கைகொடுக்காத போதும் அதிரடியாக ஆடிய ரூட் 54 ஓட்டங்களை விளாசினார்.  இதற்கமைய நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்த இங்கிலாந்து 155 ஓட்டங்களை பெற்றது.

இதன்படி 156 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன், அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது.  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கோ தொடக்கத்திலேயே பேரிடி விழுந்தது. பேட்டிங்கில் கலக்கிய ரூட் பவுலிங்கிலும் அசத்தினார். இரண்டாவது ஓவரை வீசிய அவர் முதல் மூன்று பந்துகளில் சார்லசையும்,  கெயிலையும் வெளியேற்றினார்.  எனினும் சிறப்பாக விளையாடிய சாமுவேல் ஆட்டமிழக்காது 85 ஓட்டங்களை விளாச அந்த அணி, 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து, 161 ஓட்டங்களை குவித்தது.

இவ்வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற முதலணி என்றபெருமையை வெஸ்ட் இண்டீஸ் அடைந்தது. 19 வயதுக்குட்பட்டோர் உலகக்கோப்பை, மகளிர் டி20 கோப்பை, ஆண்கள் டி20 கோப்பை என அனைத்தையும் வெஸ்ட் இண்டீஸ் அணி தன்வயப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Site Meter