20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 8 ஏப்ரல் 2016

உலகச்செய்திகள் : Latest World News

பனாமா விவகாரம் - இங்கிலாந்து பிரதமர் உண்மையை ஒப்புக் கொண்டார்

லண்டன்
David Cameron Admits He Benefited From Panama Papers Tax Haven - World News Headlines in Tamil

வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக முதலீடு செய்துள்ள விவகாரத்தில், இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். தனது தந்தை பனாமா நாட்டில் முதலீடு செய்ததும், அந்த பணத்தில் தான் பலன் அனுபவித்ததும் உண்மை, தான் என்று பிரதமர் டேவிட் கேமரூன் பேட்டியளித்துள்ளார். ஆனால், நாட்டின் பிரதமராக பதவியேற்கும் முன்பே, எனது பங்கான 30 ஆயிரம் பவுண்டுகள் கொண்ட பங்குகளை விற்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் கேமரூனுக்கு பெரும் நெருக்கடியை எற்படுத்தியது.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், "கடந்த காலங்களில் என்னிடம் பங்குகள் இருந்தன என்பது உண்மைதான். எனது தந்தை ஒரு பங்கு தரகர் என்பதால் இது இயல்பான ஒன்றுதான். எனினும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதால் கடந்த 2010-ம் ஆண்டே அவற்றை விற்றுவிட்டேன். எனக்கும் எனது மனைவி சமந்தாவுக்கும் 5000 யூனிட்கள் வரை பங்குகள் இருந்தன. அதன் மதிப்பு 30 ஆயிரம் பவுண்டாக இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த ஒப்புதல் இங்கிலாந்து அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து கேமரூன் உடனடியாக விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் உலகப் பிரபலங்களின் பெயர்ப் பட்டியலை பனாமா பேப்பர்ஸ் வெளியிட்டது.   உலகம் முழுவதும் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலர் சட்டவிரோதமாக பனாமா நாட்டில் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊழல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உட்பட பல பிரபலங்கள் இடம் பெற்றுள்ளன.


Site Meter