20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 19 ஏப்ரல் 2016

உலகச்செய்திகள் : Latest World News

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தற்கொலை படை தாக்குதலில் 28 பேர் பலி. 300க்கும் அதிகமானவர்கள் காயம்.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்.

300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலில் உள்ள புலி மகமூத்கான் பகுதியில் நேற்று காலை வெடிகுண்டு நிரப்பிய கார் ஒன்று வேகமாக வந்து வெடித்து சிதறியது. இதன்பின்னர் நகரின் மையப் பகுதியிலுள்ள அரச அலுவலகம் ஒன்றினுள் துப்பாகித்தாரிகள் நுழைந்துள்ளனர். இந்த பயங்கர தற்கொலை படை தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.


Site Meter