20 ஆகஸ்ட், 2017. ஞாயிறுக்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 7 மே 2016

உலகச்செய்திகள் : Latest World News

லண்டன் நகர மேயர் தேர்தலில் சாதிக் கான் வெற்றி பெற்றார்.

லண்டன்

இங்கிலாந்து நாட்டில் உள்ள மாகாணங்களுக்கான பிரதிநிதிகள் தேர்தல் மற்றும் சில நகரங்களுக்கான மேயர் பதவிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. லண்டன் மேயருக்கான தேர்தல் மே மாதம் 5ம் தேதி வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக் கான் 56.8 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரபல கோடீஸ்வரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெசிமாவின் சகோதரருமான ஜாக் கோல்ட் 43.2 சதவீத வாக்குகள் பெற்றார். ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றின் தலைநகராக ஒரு முஸ்லிம் மேயராக தேர்வாவது இதுவே முதல் முறை. எட்டு ஆண்டாகப் பழமைவாதக் கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதியில், முதல்முறையாக வேறொரு கட்சி வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து இங்கிலாந்துக்கு குடியேறிய பேருந்து ஓட்டுநரின் மகனாக எளிய குடும்பத்தில், 1970ஆம் ஆண்டு பிறந்தவர் சாதிக் கான். கார்டன் பிரவுன் பிரிட்டிஷ் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் சாதிக் கான் அமைச்சர் பதவி வகித்தார்.

தமது இந்த வெற்றி தம்மை நெகிழ வைத்ததாக சாதிக் கான் தெரிவித்தார். இஸ்லாமிய தீவிரவாதிகளோடு தொடர்புடையவர் என்று கன்சர்வேடிவ் கட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தை மறைமுகமாக குறிப்பிட்ட கான், "அச்சுறுத்தும் அரசியலை" வாக்காளர்கள் புறக்கணித்திருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

லண்டன் மாநகரம் தனக்கு அளித்த அனைத்து வாய்ப்புகளையும் லண்டன் குடிமக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே தமது குறிக்கோள் என்றும் அவர் கூறினார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ விலை குறைந்த வீடுகளை கட்டப்போவதாக உறுதியளித்திருக்கும் சாதிக் கானுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். சோஷலிச அரசியலை முன்னெடுக்கும் பாரிஸ் மேயர் ஆன் ஹிடல்கொ சாதிக் கானின் மனிதாபிமானமும் முற்போக்கு நிலைப்பாடும் லண்டன் மக்களுக்கு நன்மை செய்யும் என்று நம்புவதாக தெரிவித்திருக்கிறார்.

இடதுசாரியான சாதிக் கானின் வெற்றியை வெளிநாட்டிலிருக்கும் சக இடதுசாரி அரசியல் பின்புலத்தில் இருந்து மாநகர மேயர்களாகத் தேர்வானவர்கள் வரவேற்றுள்ளனர்.


Site Meter