முதல் பக்கம் » கவிதை » கவிதை தொகுப்பு
கவிதை தொகுப்பு -

Tamil Poem - Tamil Kavithaigal

உடைந்த கடவுள் (2)

வித்யாசாகர்

சந்து
பொந்துகளிலெல்லாம்
வீழ்கிறது
மனிதம்

எந்த புள்ளியில்
பிறர்
மன்னிக்கப் படுகின்றனரோ
அந்த புள்ளியிலிருந்தே மனிதம்
வீழாதிருக்கலாம்
வீழ்ந்தும் போகலாம்!

வட்டிக்கு
பணம் வாங்கி
உடைகிறது சேமிக்கும்
மனப்பான்மை;
இல்லாமலே போகிறது
மனசாட்சி!!

எங்கெங்கோ
யார் யாரோ
பேசிக் கொள்கிறார்கள் -
அவன் சரியில்லை
அது செய்தது
உலகமே அப்படித்தான் என்றெல்லாம்

நான் இப்படித்தானென்று
ஒத்துக் கொள்ள -
யாருக்குமே துணிவில்லை!!

சுட்டெரிக்கும் சமூகத்தில்
சுயமாக -
எல்லோரும் சிந்திக்காதலில்
ஒவ்வொன்றாய் நிகழ்கிறது
கொலைகள்

மதமென்றும்
ஜாதியென்றும்..   

இனமென்றும்
பணமென்றும்..

உறவேண்டும்
காதலென்றும்..

கடவுளென்றும் கூட!!!

மனிதன் செய்யும் தவறுகளில் -
கடவுள் உதவிக்கழைக்கப்பட்டு
கடவுள் தோற்கடிக்கப்பட்டு
கடவுள் குறை சொல்லப்பட்டு
கடவுள் குற்றம் சாட்டப்பட்டு
கடவுள் மறுக்கப்பட்டு
கடவுள் சபிக்கப்பட்டு
கடவுள் உடைந்து தான் போனார்.

மனிதன்
உடைக்கவில்லை என்கிறான்
கடவுள் மனிதனை
உடைத்ததாக சொல்வதேயில்லை.
கடவுள்
கடவுளாகவே இருக்கிறார்!!

கவிதை தொகுப்பு

Site Meter