முதல் பக்கம் » கவிதை » ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

கருப்பு நெருப்பு

வெற்றிப்பேரொளி

கொத்திக் கொத்திக்
களைத்த மரங்கொத்தி
விசிறும் குயிலின் குரல்.


அக்கிரகாரத்தில் புறப்பட்டு
சேரிக்குள் நுழைந்தது
மழைநீர்.


அப்பா கட்டிய வீடு.
ஆசையாய் வருடிப்பார்த்தேன்
விலைபேசி முடித்தபின்.


மரத்தடியில் கிளிஜோசியம்
வேடிக்கைப் பார்க்கும்
மரத்துக்கிளிகள்.


தாய்மடியை முட்டும்
பால் குடிக்கும் கன்று
பசித்தவனுக்குப் பாடம்.


மிதித்து விடாதே
கசங்கிவிடப் போகிறது
பூவின் நிழல்.


வாங்கப்படுவதில்லை
அடிமாடு.


ஊருக்குப் போன மனைவி.
தூக்கிப்போனாள்
குழந்தையுடன் தூக்கத்தையும்.

ஹைக்கூ கவிதை

Site Meter