முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

சுனாமி - மனதில் ரணம்

மகேஷ்

இதயத்தில் இரத்தம் வடிந்த விரிசல்கள்
இன்னும் ஓயவில்லை
மீண்டும் ஓர் மாரடைப்பு.......

காட்சிகளே உயிரின் ஆழம் வரை
பாய்ந்து விட்டது என்றால்..
அனுபவித்த நம் சகோதரத்தின் நிலை என்னவோ.

கடவுளே!
உன் கண்களை தானம் செய்துவிட்டாயா என்ன??

நம் உறவுகள் மீது பாய்ந்த நீருக்கு
போட்டியாக எத்தனையோ கண்களில்
பெருக்கெடுத்த கண்­ணீருக்கு ஆறுதல் சொல்ல
முயற்சிக்கும் வரிகள்..

புதுக் கவிதை

Site Meter