முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

தந்தை

கவிஞர் பால இளங்கோவன்

ஞானம் தந்திடும் பிதாவை வணங்குவதால்
 ஞாலம் நம்மை வாழ்த்துமே.
தந்தையின் சொற்படி நடப்பதால் அவரின்
 சிந்தை என்றும் குளிருமே.
விந்தைகள் பலவற்றை வாழ்வினில் நிகழ்த்த
 தந்தையின் அருளாசி வேண்டுமே.
அப்பாவின் ஆசிப்படி நடப்பதை விடுத்து
 தப்பாக நடந்திடல் கூடாது.
ஞாலம் நம்மை என்றும் போற்றிட
 பாலமாக இருப்பவர் தந்தையே.

புதுக் கவிதை

Site Meter