முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

கல்வி

ரவி கே.வி

கேடில் விழுச்செல்வமாம் கல்வி
நாட்டில் அனைவருக்கும் கிடைகிறதா
நாடும் வசதிக்கு ஏற்ப நால்வகை கட்டணங்கள்...
வாடும் ஏழைக்கொரு வசதியும் இங்கில்லை...

தனியார் பள்ளிகளின் தரத்திற்கு ஏற்ப
அரசுப் பள்ளிகளும் ஆகிடுமா?
காசற்ற ஏழைக்கு கல்வியில்லை என்றானால்
மாசற்ற சமுதாயம் சாத்தியமா?!...

இன்றைய தேவை....

வாழும் வழிகாட்டும் வாழ்க்கை கல்வி...
ஏழை எளியோருக்கும் உயர்தர கல்வி...

காளிதாசனுக்கு கலைமகள் அருளியது....
காசுபடைத்தோரின் கருவியாய் போனது....

காசில்லா ஏழை என்ன செய்வான்.....

சோறூட்டும் போது அன்னை சொன்னது கொஞ்சம்....
செந்தமிழை சேறாக்கும் சென்னையில் கொஞ்சம்...
அவலங்களை தாண்டி அரசிடம் கொஞ்சம்...
இலவசமாய் பெற்றிங்கே ஏழையும் கற்றான்....

என்மொழியில் நான் கற்க கட்டணமா....?!- இந்நிலையை
செம்மொழி மாநாடு மாற்றிடுமா....?!
கட்டணங்கள் இனி கழிப்பிடத்தோடு போகட்டும்.....
கல்விக்கும் ஏனோ....?!

புதுக் கவிதை

Site Meter