முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

பிறந்தநாள் வாழ்த்துகள்

சண்முகம்

பூக்களும் வர்ணமும் சேர்ந்து
தொடுத்த நந்தவன தேருக்கு 
இன்று பிறந்த நாள்

கல்லும் உளியும் சேர்ந்து
வடித்த சிற்பத்திற்கு
இன்று பிறந்த நாள்

தமிழும் இலக்கணமும் சேர்ந்து
எழுதிய கவிதைக்கு
இன்று பிறந்த நாள்

இசையும் குரலும் சேர்ந்து
படித்த பாட்டுக்கு
இன்று பிறந்த நாள்

கடலும் காற்றும் சேர்ந்து
கொடுத்த அலைக்கு
இன்று பிறந்த நாள்

சந்திரனும் சூரியனும்
அளித்த ஆலோசனை படி
இந்திரன் படைத்த
என் அழகு சுந்தரிக்கு
இன்று பிறந்த நாள்

என் உடலும் உள்ளமும்
ஒன்றாய் சேர்ந்து
உயிரின் உருவமாய் நிற்கும்
என் மனைவிக்கு
இன்று பிறந்த நாள்

என் இனியவளே உனக்கு
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

என்றும் உன்னை என்னுள்
வைத்திருக்கும் உன் கணவன்

புதுக் கவிதை

Site Meter