முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

கிறிஸ்மஸ் நாள்..

சேவியர்

சர்ப்பம் தந்த பாவத்தை
கர்ப்பம் வந்து
தீர்த்த நாள்.

மரத்தால் விளைந்த பாவத்தை
வரத்தால் களைந்த
மந்திர நாள்.

வார்த்தை ஒன்று
மனிதனாய் வடிவெடுத்த
நல்ல நாள்.

தொழுவம் ஒன்று
தொழுகை பெற்ற
திருநாள்.

ஒதுக்கப்பட்டவை
வணக்கம் பெறும் என
வருகையால் சொன்ன நாள்.

ஆடிடைக் கூட்டில்
ஆதவன் உதித்த
அதிசய நாள்.

அனைவருக்கும் விழா நாள் வாழ்த்துக்கள்

புதுக் கவிதை

Site Meter