முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

உன்னை விட நான் அழகில்லை....?

இதயவன்

கார் மேகமும்
கரும நிற - உன்
கூந்தலை கண்டு
காரணமில்லாமல் களைந்து
போகும்....!
சுட்டெரிக்கும் சூரியனும்
சுட்டு விழி - உன்
பார்வையை கண்டு
சுருண்டு சுருண்டு
குளிர்த்து போகும்...!
வெட்ட வெளி வெண்ணிலவும்
வெகிளி தனமுள்ள - உன்
அழகை கண்டு
வெளுத்து போகும்....!
ஏழு வர்ணம் பூசிய வானவிலும்
ஒரு வர்ணம் உள்ள - உன்
புருவத்தை கண்டு
தனித் தனியே பிரிந்து போகும்....!
பறந்து திரியும் பட்டாம் பூச்சியும்
திறந்து மூடும் - உன்
இமையை கண்டு திசை
தெரியாமல் தொலைந்து போகும்....!
பூத்து குலுங்கும் பூக்களும்
புதியதாய் பூத்த - உன்
புன்னகையை கண்டு
எகிறி குதித்து
புதைந்து போகும்...!
அலைந்து அலைந்து அடிக்கும் கடலையும்
ஒளிந்து இருக்கும் - உன்
வெட்கத்தை கண்டு
உறைந்து உறைந்து
வற்றி போகும்...!
விஸ்வருபம் எடுக்கும் புயலும்
மௌனங்கள் வெடுக்கும் - உன்
வார்த்தையை கண்டு
மெது மெதுவாய்
அடங்கி போகும்...!
வளைந்து நெளிந்த வயல் வெளியும்
அசைந்து பிசைந்த - உன்
இடையை கண்டு
சரிந்து சரிந்து
செத்துப் போகும்...!
படர்ந்து விரிந்த புல்வெளியும்
நடந்து சென்ற - உன்
பாத சுவற்றை கண்டு
சட்டென்று பட்டுப் போகும்...!

புதுக் கவிதை

Site Meter