முதல் பக்கம் » கவிதை » புதுக் கவிதை
புதுக் கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

களவாணியிடம் கவர்ந்தவள்

புகழேந்தி

திண்ணமிட்டேன் கன்னமிட்டேன்
பல வீடுகளின் கல்லுடைத்தேன்
கோட்டையை தாண்டினேன்
இரும்பு கேட்டையே உடைத்தேன்
என் பாதம் படாத பங்களாக்கள் இல்லை
என் கை படாத கதவுமில்லை
இந்த களவாணியை கவர்ந்த
கன்னியே
மலைக்கோட்டைகளை குடைந்தவன் நான்
உன் மனக்கோட்டையை திறக்க
வழிவகை காணேன்
கள்ளச்சாவி போடும் கள்வன் நான்
உன் இதயக்கதவை திறக்க
எந்த சாவியையும் காணேன்
கண்ணசைவில் கதவை திறப்பவன்
உன் கண்ணசைவிற்காக காத்திருக்கிறேன்
பிறர் உடமையை திருடிய நான்
உன்னிடம் இழந்தேன் என் மனதை
இழப்பின் வலிமையை உணர்ந்தேன்
இனியொரு முறை செய்யேன் இத்தவறை
பறிகொடுத்தவன் பதறுகிறேன்
இழந்த என் இதயத்தை திருப்பிக்கொடு
இருவரும் ஆனந்தமாய் வாழ வழிகொடு

புதுக் கவிதை

Site Meter