முதல் பக்கம் » கவிதை » கவிதை தொகுப்பு
கவிதை தொகுப்பு -

Tamil Poem - Tamil Kavithaigal

தாகம்

மு.மேத்தா
தேசத் தேர்
நிலைக்கு வராமல்
சிலருடைய
சிலைக்குக் கீழே
சிறைப்பட்டு விட்டது!

எங்கள்
கைகளைக்
கட்டிப் போட்டுவிட்டு
வடமிழுக்கச் சொல்கிறார்கள்
இந்த
வல்லவர்கள்

தண்ணீரில்
மூழ்கிக் கொண்டிருக்கிறது
தாய் நாடு-

எங்களுக்கே
தாகம் இன்னும்
தணியாமல் இருக்கிறது!

கவிதை தொகுப்பு

Site Meter