முதல் பக்கம் » கவிதை » கவிதை தொகுப்பு
கவிதை தொகுப்பு -

Tamil Poem - Tamil Kavithaigal

கடல்

திருக்குவளை அறிவழகன்

பகலில்
கடல்
ரசமிழந்த கண்ணாடி
ஆகவே
நிலா
இரவில் வருகிறது
முகம்பார்க்க...!

அலை
காற்றெழுதும்
கவிதை!

கவிதையின் பொருள்
கம்பனுக்கே விலங்காது
ஆனாலும் படிக்கிறது
பலகோடி இதயங்கள்!

மழை
இல்லையே
கொந்தளிக்கிறது
மனசு...

மழையால்
கொந்தளிக்கிறது
கடல்...

கடல்
கழற்றிப்போடும்
அலை உடையை
எடுத்து
உடுத்தலாமா...?
இது
ஏழையின் கற்பனை

கடலில்
இடம் வாங்கி
மிதக்கும் வீடுகள்
கட்டி
வாடகைக்கு விடலாமா
இது
பணக்காரனின் கற்பனை.

நிர்வாணப் பள்ளமாய்
இருந்த உனக்கு
நீராடை அணிவித்து
நாகரிகம் வளர்த்தது
யார் கடலே...?

கவிதை தொகுப்பு

Site Meter