ஏவி.எம் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா, தமன்னா நடிக்கும் படம் அயன். இந்தப் படம் குறித்து இயக்குனர் கே.வி. ஆனந்த் நிருபர்களிடம் கூறும்போது, அயன் என்பது தமிழ் வார்த்தைதான். இதற்கு தனித்தவன் என்று பொருள். பட நாயகனான சூர்யா, கதைப்படி 25 வயது இளைஞர். அவர் தனித்து நின்று எப்படி எதிர்ப்புகளை மீறி தனது இலக்கை எட்டுகிறார் என்பதே கதை. படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னையில்தான். இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காத சென்னையை இப்படத்தில் பார்க்கலாம். அவ்வளவு தத்ரூபமாகவும் யதார்த்தமாகவும் சென்னையை காட்ட உள்ளோம், என்றார். சூர்யா பேசும்போது, படத்தில் பல கெட்அப்புகள் இருக்கிறது. அதை இப்போதே சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடிக்க விரும்புகிறேன் இதிலும் அதை ரசிகர்கள் பார்க்கலாம் என்றார்.