இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத்தில் சந்தியா
(03 Jul 2009)
இரும்புகோட்டை முரட்டு சிங்கம் படத்தில் மலைவாழ் மக்களின் இளவரசியாக நடிக்கிறார் சந்தியா. இதுபற்றி அவர் கூறியது: ஆப்தரக்ஷகா (சந்திரமுகி 2-ம் பாகம்) கன்னட படப்பிடிப்பு முடிந்தது. ஹீரோவின் தங்கைகளில் ஒருவராக நடிக்கிறேன். சென்னை, மைசூர், பழனி என 3 கட்டமாக ஷூட்டிங்கில் பங்கேற்றேன். விஷ்ணுவர்தன், லட்சுமி, கன்னட பாவனா என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். படப்பிடிப்பில் பி.வாசு திடீரென்று கோபப்படுவார் என பயமுறுத்தினார்கள். ஆனால் அவரை கோபப்பட்டு ஒருமுறைகூட பார்க்கவில்லை. அவரே ஒவ்வொரு காட்சியிலும் எப்படி நடிக்க வேண்டும் என்று நடித்து காட்டுவார். அதை அப்படியே செய்திருக்கிறேன். ஓடிப்போலாமா, நூற்றுக்கு நூறு படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. சிம்புதேவன் இயக்கும் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் மலைவாழ் மக்களின் இளவரசியாக நடிக்கிறேன். இதற்காக மயிலிறகுகளால் அலங்கரிக்கப்பட்ட கிரீடம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சில காட்சிகளில் நடித்தேன். வரும் 6-ம் தேதி முதல் 15 நாட்கள் சேலத்தில் நடக்கும் ஷூட்டிங்கில் பங்கேற்கிறேன். இளவரசிக்கான வசிகர தோற்றத்துக்காக உணவு கட்டுப்பாடுடன் தினமும் உடற்பயிற்சியும் செய்கிறேன். இவ்வாறு சந்தியா கூறினார்.
மேலும் துணுக்குகள்
- நித்யானந்தாவுடன் தொடர்பில்லை - ரோஹினி!
- சோதனை ஒளிபரப்பை தொடங்கிய கேப்டன் டிவி!
- சிகப்பு ரோஜாக்கள் ரீமேக்கில் ஸ்ருதிஹாசன்!
- மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் ஆண்ட்ரியா!
- நந்தி விருது பெற்ற சுவாதி!
- கந்தகார் படத்திலிருந்து சூர்யா விலகல்
- கந்தா படத்துக்காக நிஜ என்கவுன்ட்டர்
- இந்தியா டுடே டாப் 50ல் இடம்பிடித்த ரஜினி!
- நடிக்க வருகிறார் வடிவேலு மகன்
- இசையமைப்பாளராக அறிமுகமாகும் லிவிங்ஸ்டன்
- நடிகர் கவுண்டமணி மருத்துவமனையில் அனுமதி!
- தனுஷ்-ஜெனிலியா நடிக்கும் உத்தமபுத்திரன்
- பரத் நடிப்பில் உருவாகும் இவன் யாரோ
- இந்தியில் பிஸியான ரீமா சென்
- சௌந்தர்யாவுக்கு செப். 3ல் திருமணம்
- சைதை செல்லா இசை வெளியீடு!
- சுறாவுக்கு பிறகு விஜய் நடிக்கும் படம் பகலவன்!
- ரெட்டச்சுழி இசையை வெளியிட்ட ஐஸ்வர்யா ராய்!
- சிம்பு படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி. ஸ்ரீராம்!
- யு சான்றிதழ் பெற்ற முன்தினம் பார்த்தேனே!









