பிரபல இந்தி நடிகை கேத்ரினா கைப் புத்தாண்டு நிகழ்ச்சியில் நடனமாட ரூ.2 கோடி வாங்கியுள்ளார். இதை அறிந்து இந்தி திரை உலகினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மல்லிகா ஷெராவத்தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புத்தாண்டு கொண்டாட்டங்களில் நடிகர், நடிகைகள் பங்கேற்று பணம் சம்பாதிக்கும் பழக்கத்தை துவக்கி வைத்தார். நட்சத்திர ஓட்டலில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அதில் சிறிது நேரம்தான் மல்லிகா ஷெராவத் பங்கேற்று நடனம் ஆடினார். அதற்கு அவர் வாங்கிய தொகை ரூ.90 லட்சம் அது தான் அதிகமான தொகையாக இருந்தது. தற்போது கேத்ரீனா கைப் ரூ.2 கோடி வாங்கி மல்லிகா ஷெராவத்தை வீழ்த்தியுள்ளார். இவ்வருட புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அழைக்க தீபிகா படுகோனே, கேத்ரினா கைப் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியாக கேத்ரினா தேர்வானார். தீபிகா நான்கு படங்களில்தான் நடித்துள்ளார். ஓம் சாந்தி ஓம் படம் மட்டும் வெற்றிகரமாக ஓடியது. நடனமாடும் பயிற்சியும் அதிகம் இல்லை. கேத்ரினா நடித்த பல படங்கள் ஹிட்டாகி உள்ளன. நடனமாடுவதிலும் திறமையானவர். எனவே அவருக்கு ரூ.2 கோடி கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளனர்.