முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

மருத்துவமனையில் ஆச்சி மனோரமா

 (

Actress Manorama aachi in hospital

)
Actress Manorama aachi in hospital

நடிகை மனோரமாவுக்கு முழங்கால் வலி காரணமாக சென்னை மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மயக்கம் தெளியாததால் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். முழங்கால் வலி காரணமாக கேரளாவுக்குப் போய் அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார் மனோரமா. ஆனால் அதில் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை கால் வலியும் சரியாகவில்லை. இதையடுத்து சென்னை திரும்பிய அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழங்காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்கு முன்பு கொடுத்த மயக்க மருந்து இன்னும் தெளியாததால் மனோரமா கண் விழிக்கவில்லை. இதையடுத்து அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்
Site Meter