முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

ஜக்குபாய் சிறப்பு காட்சிக்கு வந்த சிம்ரன்

 (

Simran visit in Jaggubhai Premiere Show

)
Simran visit in Jaggubhai Premiere Show

ஒன்ஸ்மோர் படம் மூலம் 1996-ல் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சிம்ரன். பின்னர் வி.ஐ.பி. படத்தில் பிரபுதேவாவுடன் நடித்தார். 1997-ல் வெளியான நேருக்கு நேர் படம் சிம்ரனை பிரபலப்படுத்தியது. பின்பு அப்பாஸூடன் பூச்சுடவா, அஜித்துடன் அவள் வருவாளா, சரத்குமாருடன் நட்புக்காக, விஜய்யுடன் துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே ஆகிய வெற்றி படங்களில் நடித்தார். கமலுடன் பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் ஜோடி சேர்ந்தார். பிதாமகன், நியூ போன்ற படங்களில் நடித்தார். வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா அம்மாவாக வந்தார். கடைசியாக நடித்த படம் ஐந்தாம் படை. இதில் சுந்தர் சி.யின் அண்ணியாக நடித்தார். அதன் பிறகு அம்மா, அக்காள், அண்ணி வேடங்களுக்கே வாய்ப்புகள் வந்தன. அவற்றில் நடிக்க அவர் விரும்பவில்லை. கணவர் தீபக்குடன் மும்பையில் குடியேறினார். சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டதாக பேசப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் நடிப்பாசை சிம்ரனை தொற்றிக் கொண்டுள்ளது. சென்னையில் பட விழாக்கள், சிறப்பு காட்சிகளில் பங்கேற்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். சிம்ரன் முன்பு ஒல்லியாக இருந்தார். இப்போது கொஞ்சம் எடை போட்டு குண்டாக தெரிகிறார். ஜக்குபாய் சிறப்பு காட்சிக்கு வந்த சிம்ரனை சக நடிகைகள் சந்தித்து நலம் விசாரித்தனர். சில தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் நடிக்கவும் கேட்டுள்ளனர். அக்காள், அண்ணி, கதாபாத்திரங்களில் மீண்டும் ஒரு சுற்று வர தயாராகி வருகிறார் சிம்ஸ்!

மேலும் செய்திகள்
Your Ad Here
Site Meter