Divya Spandana produce to kannada film
கன்னடப் படங்களை தயாரிக்கிறார் திவ்யா!
(08 Feb 2010)
Enter Your Comments



பட தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறார் திவ்யா. இதுபற்றி அவர் கூறியது: வாரணம் ஆயிரம் படத்துக்கு மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. இப்படத்தில் நானும் நடித்தேன் என்பதில் மகிழ்ச்சி. இதில் முதல்முறையாக பின்னணி பேசி நடித்தேன். அதற்கான தைரியத்தை கொடுத்தது இயக்குனர் கௌதம் மேனன்தான். கன்னடத்தில் நடித்துள்ள, ஜஸ்ட் மாட் மாடாலி வெளியாக உள்ளது. தமிழில் சத்யா ஜோடியாக நடித்துள்ள காதல் டூ கல்யாணம் திரைக்கு வரும். கன்னடத்தில் படங்களை தயாரிக்க நிறுவனம் தொடங்குகிறேன். விளம்பர பட இயக்குனர் பிரகாஷ் கூறிய கதை பிடித்திருந்தது. அதை கன்னடத்தில் தயாரிக்க உள்ளேன். 3 இடியட்ஸ், வேக் அப் சைட் ஆகிய இந்தி படங்களின் கன்னட ரீமேக்கில் நடிப்பதாக சொல்கிறார்கள். ரீமேக்கில் நடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம், ஒரிஜினல் படத்துடன் அனைத்து விஷயங்களையும் ஒப்பிட்டு பார்ப்பார்கள். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக பெங்களூர் அணிக்கான அம்பாசிடராக இம்முறையும் தொடர்கிறேன். இது பெருமையாக உள்ளது என்று கூறினார்.

 
மேலும் துணுக்குகள்

Tamil Horoscope
Exclusive Tamil Actress Pictures
CHANDRAYAAN-1
Tamil Online Free eGreetings eCards
Latest Tamil Movies Online Website
Tamilnadu Classifieds - Koodal Business Link