முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

பஞ்சாபி இளைஞருக்காக காத்திருக்கும் பிரியங்கா சோப்ரா

 (

Bollywood sexy actress Priyanka Chopra wants to wed a Punjabi Man

)
Bollywood sexy actress Priyanka Chopra wants to wed a Punjabi Man

ஃபேஷன் படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை பிரியங்கா சோப்ரா, பஞ்சாபி இளைஞரை மணமுடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரியங்கா சோப்ரா தனது 28வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அளித்த பேட்டியில் பிரியங்கா கூறியது இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்வேன், மணமகனாக எனக்கு பிடித்த பஞ்சாபி இளைஞரை தேர்ந்தெடுப்பேன். அவர் உடல் வலிமை மிக்கவராகவும், நல்ல மனம் கொண்டவராக இருக்க வேண்டும். நான் திரையுலகை சேர்ந்தவள் என்பதால் என்னைப் பற்றி வெளியாகும் சர்ச்சைகளை கண்டு கொள்ளாதவராக என் மீது அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும். முக்கியமாக பொது இடத்தில் என்னிடம் யாரும் தவறாக நடக்க முயன்றால் அந்த நபரை போட்டு பின்னி எடுக்கும் தைரியம் உள்ளவராகவும் என் உணர்வுகளை புரிந்து கொண்டு எனக்கு மரியாதை அளிப்பவராகவும் இருக்கும் இளைஞர் கிடைக்கும் வரை எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருக்கத் தயாராக இருக்கிறேன், என்று கூறினார். எந்த பஞ்சாப் இளைஞர் வந்து நல்லா வசமாய் மாட்டப் போறாரோ?

மேலும் செய்திகள்
Site Meter