முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

நவம்பரில் ராமராஜன்-நளினி மகள் திருமணம்!

 (

Ramarajan-Nalini Getting their Daughter Married

)
Ramarajan-Nalini Getting their Daughter Married

மக்கள் நாயகன் என்று அழைக்கப்பட்ட நடிகர் ராமராஜனின் மகளுக்கு வரும் நவம்பரில் திருமணம் நடைபெற இருக்கிறது. ராமராஜன்-நளினி தம்பதிகளின் மகள் அருணா. இவர் எம்.ஏ., பி.எல். பட்டதாரி ஆவார். இதுகுறித்து ராமராஜன் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளதாவது: நடிகர் ராமராஜனின் மகள் அருணாவுக்கும், குவைத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மானேஜராக இருக்கும் ராமச்சந்திரன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இவர்களது திருமணம் வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. திருமண ஏற்பாடுகளை ராமராஜனும், நளினியும் செய்து வருகிறார்கள். ராமராஜன் அதிமுகவை சேர்ந்தவர் என்பதால், இவரது மகளின் திருமணத்திற்கு முதல்வர் ஜெயலலிதா தலைமை வகிப்பார் எனத் தெரிகிறது. பொண்ணு கல்யாணத்துக்காகவாவது ஒண்ணு சேர்ந்தீங்களே..... சந்தோஷம்!

மேலும் செய்திகள்
Your Ad Here
Site Meter