முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

ஹெலிகாப்டரின் கம்பியைப் பிடித்து தொங்கிய அஜித்!

 (

Ajith's daring stunt in Billa 2

)
Ajith's daring stunt in Billa 2

'பில்லா 2' படத்தின் டிரைலருக்கு பெரும் வரவேற்பு இணையத்தில். பல லட்சம் பேர் பார்த்த வீடியோவாக மாறியுள்ளது இந்த ட்ரைலர். வெளியான சில மணி நேரங்களில் 4 லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள். இந்த வீடியோவில் ரசிகர்களை உறைய வைத்தது அஜித்தின் மயிர்க்கூச்செரியும் சண்டைக் காட்சிகள். மிக உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில், கயிறுகூட கட்டிக் கொள்ளாமல் திறந்த கதவருகே நின்றபடி அஜித் போடும் சண்டைக் காட்சி அது. நானும் எத்தனையோ படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்துள்ளேன். ஆனால் இந்த அளவு ரிஸ்க் எடுத்த முன்னணி நடிகரை பார்த்ததில்லை. மைனஸ் டிகிரி குளிரில், உயரப் பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்த அஜித், ஒரு கையால் ஹெலிகாப்டரின் கம்பியைப் பிடித்து தொங்கியபடி சண்டை போட்டது என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சினிமா வரலாற்றிலேயே எந்த நடிகரும் எடுக்காத ரிஸ்க் இது என அவருக்கு ஸ்டண்ட் அமைத்துக் கொடுத்த இயக்குநர் கீசா காம்பக்தீ வியப்பு தெரிவித்துள்ளார். மிரட்டிட்டீங்க போங்க....... இனி ஒங்க ஃபேன்ஸ் தூங்க மாட்டாங்களே......

மேலும் செய்திகள்
Your Ad Here
Site Meter