முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

கண்மூடித்தனமாக எந்த படத்தையும் நான் ஒத்துக்கொள்வதில்லை!-அனுஷ்கா

 (

Never I accept film blindly

)
Never I accept film blindly

சினிமாவில் கடந்த 2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அனுஷ்கா. அந்த வகையில், அவர் நடிகையாகி 9 வருடங்கள் முடிந்து சமீபத்தில்தான் 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். அப்படி திரும்பிப்பார்த்தபோது தமிழ், தெலுங்கு என்ற இரண்டு மொழிகளில் மட்டுமே நடித்திருந்தார்.

அதுபற்றி அவர் காரணம் சொன்னபோது, இந்த இரண்டு மொழிகளுமே எனக்கு நல்ல வாய்ப்புகளாக தந்தன. அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த டைரக்டர்களின் படங்கள் எனக்கு கிடைத்தது.

எந்த டைரக்டராக இருந்தாலும் எனக்கு வெயிட்டான கதாபாத்திரமாக கொடுத்தனர். அதனால்தான் எனது திறமை வெளிப்பட்டு இப்போது 33 வயதிலும் ரஜினி, அஜீத் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறேன்.

அதேபோல், தெலுங்கில் ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி என்ற சரித்திர படங்களில் கதாநாயகியாக நடிக்கிறேன். இதெல்லாம் திறமையான டைரக்டர்களின் படங்களில் நான் நடித்ததினால் கிடைத்த வாய்ப்புகள். அதனால்தான் இப்போது எந்த படமாக இருந்தாலும கவனமாக ஒத்துக்கொள்கிறேன்

மேலும் செய்திகள்
Your Ad Here
Site Meter