முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

இது நம்ம ஆளு படத்தின் எதிர்காலம் கேள்விக்குறி

 (

The future of the film ITHU NAMMA AALU

)
The future of the film ITHU NAMMA AALU

சிம்பு, பாண்டிராஜ் கை கோர்த்த இது நம்ம ஆளு படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் தற்போது கிணற்றில் போட்ட கல்லாய் கிடக்கிறது. என்ன காரணத்தினாலோ இந்தப் படத்தின் மீது ஆர்வம் காட்டாமல் வேறு வேலையைப் பார்க்கப் போய்விட்டார் சிம்பு. பாண்டிராஜ் பொறுமையாய் காத்திருந்தார்.

சிம்புவிடமிருந்து பாசிட்டிவ்வான ரியாக்ஷன் வராத காரணத்தினால், அவரும் இது நம்ம ஆளு படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, சூர்யாவின் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கப்போய்விட்டார்.

இது நம்ம ஆளு படம் என்னாச்சு? ஏன் படத்தை முடிக்கவில்லை என்று அப்படத்திற்கு ஏற்பட்ட தடங்கல் பற்றி சிம்பு, பாண்டிராஜ் இருவரிடமும் கேட்டால், ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சூர்யாவின் தயாரிப்பில் படம் இயக்க ஆஃபர் வந்ததால், என் படத்தை அப்படியே போட்டுவிட்டு போய்விட்டார் என்று சிம்பு பாண்டிராஜ் மீது குற்றம்சாட்டுகிறார்.

இது பற்றி பாண்டிராஜிடம் விளக்கம் கேட்டால், வேறு கதை சொல்கிறார். அதாவது, இது நம்ம ஆளு படத்தை தானே தயாரித்து இயக்கும் எண்ணத்தில்தான் சிம்புவிடம் கால்ஷீட் கேட்டாராம்.

கதையைக் கேட்ட பிறகு இம்ப்ரஸ்ஸான சிம்பு, படத்தில் தானும் தயாரிப்பாளராக விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவர் விருப்பப்படியே சிம்பு பாண்டிராஜ் கூட்டு தயாரிப்பில் இது நம்ம ஆளு படத்தை ஆரம்பித்துள்ளனர்.

படத்துக்கு பூஜை போட்டதில் இருந்து சிம்பு தரப்பிலிருந்து ஒரு பைசாகூட செலவு பண்ணவில்லையாம். சுமார் 3 கோடி வரை பாண்டிராஜ்தான் செலவு பண்ணி இருக்கிறாராம். சிம்பு தர வேண்டிய பணத்தை அவரது அப்பா டி.ராஜேந்தரிடம் கேட்டால் அடுக்குமொழியிலேயே அலட்டி இருக்கிறார்.

பொறுமையை சோதிக்கும்படி டி.ஆரின் பேச்சு எல்லை மீறிப்போகவே இது நம்ம ஆளு படத்தை அப்படியே போட்டுவிட்டு சூர்யா படத்தை இயக்கப்போய்விட்டாராம் பாண்டிராஜ்.

மொத்தத்தில் இது நம்ம ஆளு படத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது

மேலும் செய்திகள்
Your Ad Here
Site Meter