முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

இனி நான் ஜனனி மட்டும் தான்

 (

Now I Janani Only

)
Now I Janani Only

பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் ஜனனி அய்யர். தமிழ்நாட்டு பெண்ணான இவரை அதன்பிறகு ஸ்ரீகாந்துடன் பாகன் படத்தில் நடித்தவர், பின்னர் தெகிடி என்ற படத்தில் புதுமுக நடிகருடன் நடித்தார்.

ஆனால், அந்த படத்தில் ஆடியோ விழா சென்னையில நடந்தபோது, விழாவுக்கு வந்த கரு.பழனியப்பன் உள்ளிட்ட சில டைரக்டர்கள் நடிகைகளை தங்களது பெயருக்கு பின்னால் ஒட்டியிருக்கும் ஜாதிப்பெயரை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

மேலும், ஜாதி மதங்களை மறந்து விட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அமர்ந்திருக்கும் இடம் சினிமா தியேட்டர். அதனால் அங்கேயும் அவர்களுக்கு ஜாதியை நினைவுபடுத்துவது போன்று நடிகைகள் தங்கள் பெயருடன் ஜாதியை குறிப்பிடுவது சரியல்ல என்றும் கருத்து சொன்னார்கள்.

ஆனால் அப்போது அதுபற்றி எந்த கருத்தும் ஜனனி அய்யர் சொல்லவில்லை. ஆனால், இப்போது மரியான் படத்தில் நடித்த பூ பார்வதி தனது பெயருக்கு பின்னால் இருந்த மேனனை கத்தரித்து விட்டதால், ஜனனி அய்யரும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது பெயரில் இருந்த அய்யரை நீக்கி விட்டதாக அறிவித்துள்ளார்.

அதோடு, மீடியா நண்பர்களும் இனி என்னை ஜனனி என்றே குறிப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்

மேலும் செய்திகள்
Your Ad Here
Site Meter