முதல் பக்கம் » சினிமா » செய்திகள் » துணுக்குகள்

Latest Tamil Movie Hot News Special

இரட்டை வேடத்தில் மீண்டும் ஜெயம்ரவி!

 (

Jayam Ravi to play dual role again!

)
Jayam Ravi to play dual role again!

அமீர் இயக்கிய ஆதிபகவன் மற்றும் சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் ஆகிய படங்களில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் ஜெயம்ரவி. இந்த படங்களில் இரண்டு வேடங்களுக்குமிடையே வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு படத்திற்குமே இரண்டு வருடங்கள் எடுத்துக்கொண்டார் ஜெயம்ரவி. நிமிர்ந்து நில் படத்தில் இரண்டு மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்திருந்தார். அதோடு அப்படமும் பேசப்பட்டதால் ஜெயம்ரவி இரண்டு வருடங்களாக கஷ்டப்பட்டு நடித்ததற்கு பலன் கிடைத்தது. அதனால் தற்போது மாறுபட்ட கதைகளில் நடிப்பதில் ஆர்வத்தை திருப்பியிருக்கும் அவர், தனி ஒருவன் படத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக நடிக்கிறார். அதைத் தொடர்ந்து சுராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் மீண்டும் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதற்கு முன்பு அவர் இரண்டு வேடங்களில் நடித்த இரண்டு படங்களிலுமே ஹீரோ, வில்லனாக நடித்தது போலவே இந்த படத்திலும் நடிக்கிறாராம். இருப்பினும் முந்தைய படங்களில் இருந்து இந்த படத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக, நிறைய ரிஸ்க் எடுக்கிறாராம் ஜெயம்ரவி.

மேலும் செய்திகள்
Your Ad Here
Site Meter