முதல் பக்கம் » சினிமா » திரைக்குப்பின்

Tamil Movie Celebrity Hari, Tamil Movie Actor, Actress Interview

சாமி இயக்குநர் - ஹரி

Hari Tamil Celebrity HARI

விக்ரம் நடித்து வெளிவந்துள்ள "சாமி" படம் கிட்டதட்ட ஐம்பவதாவது நாளை நெருங்குகின்றது. இந்நிலையிலும் 130 திரையரங்குகளில் ஏறக்குறைய அரங்கு நிறைந்த காட்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தை இயக்கிய இயக்குநர் 'ஹரி' இனிவரும் காலங்களில்........... நிறைய தயாரிப்பாளர்கள் படம் எடுத்து தரும்படி கையில் பணத்தோடு வருகிறார்கள்.
ஆனால் தனக்கு பணம் முக்கியமில்லை.
நல்ல கதை + அதற்கேற்ற கதாநாயகன் தேவை என்கிறார் ஹரி இனி இவரிடம்.........

உங்களைப் பற்றி ஒரு சிறு குறிப்பு?

திருநெல்வேலி நாசரேத் என்னுடைய சொந்த ஊர். நான் சின்ன வயதாக இருக்கும் போதே எங்கள் குடும்பம் சென்னை சாலிகிராமத்திற்கு வந்துவிட்டோம். வணிகவியல் இளங்கலை படிப்பு முடித்துவிட்டு, அடுத்த என்ன படிக்கலாம் என்று யோசிக்கும் போதுதான் சினிமா ஆசை என்னிடம் ஒட்டிக் கொண்டது.


சினிமாவில் முதலில் எதற்கு முயற்சி செய்தீர்கள்?

நிச்சயம் நடிப்பு என்று சொல்ல மாட்டேன். இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதன்படி உதவி இயக்குநராக செந்தில்நாதன் சாரிடம் சேர்ந்தேன். அப்புறம் "வள்ளி" படத்தில் நடராஜ், "அவதாரம்" படத்தில் நாசர், அப்புறம் அலெக்ஸ் பாண்டியன் இப்படி பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்தேன்.
ஒரு சமயம் கே.பாலசந்தர் சாரை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. போய் பார்த்தேன். என்னை "கல்கி" படத்தில் உதவியாளராக சேர்த்துக் கொண்டார். பிறகு சரண் இயக்கிய "அமர்க்களம்", "பார்த்தேன் ரசித்தேன்" படங்களில் இணை இயக்குநராக பணியாற்றினேன்.

முதல் படம் ஏன் சரியாக போகவில்லை?
பிரசாந்தை வைத்து நான் இயக்கிய என்னுடைய முதல் படம் "தமிழ்" படம் சரியாக போகவில்லை என்றாலும், விநியோகிஸ்தர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தாத படம்.
"சாமி" இயக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது?
"சாமி" படத்திற்கு முன் கமல்சார், அல்லது விஜய்காந்த் சாரை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தேன். இதற்கான கதை எல்லாம் ரெடியாக இருந்தது. "தவசி" படம் தயாரித்த சி.ஜே.நிறுவனம் தான் எனக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார்கள். ஆனால் சூழ்நிலை காரணம் அவர்கள் இருவரின் கால்ஷீட் கிடைக்கவில்லை. அட்வான்ஸை திருப்பி கொடுத்துவிட்டேன். அந்த நேரம்தான் கவிதாலயா பிலிம்ஸ், விக்ரம் கால்ஷீட் வாங்கி வைத்திருப்பதாகவும், ஒரு படம் செய்து தரும்படி கேட்டார்கள். அது தான் "சாமி".
சாமி படத்தில் விக்ரம் இட்லியில் பீரை ஊற்றி பிசைந்து சாப்பிடுகிறாரே இது எப்படி?
பொதுவாக குடிகாரர்களுக்கு குடித்துவிட்டால் தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. அதை மனதில் வைத்துதான் இந்த காட்சியை எடுத்தேன்.
இன்னொரு விஷயம், இதை பார்க்கும் சில தண்ணி அடிப்பவர்கள், படத்தில் நமக்கான விஷயம் இருக்கிறது என்று வருவார்கள் என்ற நம்பிக்கைதான்.
அடுத்து ரஜினியை வைத்து "அய்யா" என்றப் படத்தை இயக்கப் போவதாக சொல்கிறார்கள்?
இந்த நிமிடம் வரை அப்படி எதுவும் இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நான் விடுவதற்கும் தயாராக இல்லை.
"சாமி" படத்தை பார்த்துவிட்டு, என்னையும், விக்ரமையும் நிறைய பாராட்டினார் ரஜினி சார். அவருக்கான ஒரு கதையும் என்னிடம் உள்ளது.
படத்தை எவ்வளவு நாளில் முடித்தீர்கள்?
77 நாட்களில் வெறும் 87 பிலிம் ரோலில் படத்தை முடித்தேன். திருநெல்வேலியின் மிக முக்கியமான இடங்களில் எடுத்தோம். கூட்டம் சேர்ந்துவிட்டால் வம்பாகிவிடும் என்பதால், விக்ரமை ஒரு வேனுக்குள் உட்காரவைத்துவிட்டு, ஷாட் ரெடி என்றதும் ஓடி வந்து நடித்துவிட்டு மறுபடியும் வேனில் ஏறி வேறு இடத்திற்கு போய்விடுவார்.
அடுத்த படம்?
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், சிலம்பரசன் நடிக்கும் "அருள்" என்ற படத்தை இயக்க உள்ளேன். மனிதனாக பிறந்த ஒருவன் சந்தோஷமாக இருக்க ஒரு வழி இருக்கிறது........ அது தான் படத்தின் கதை கரு. அதிரடி ஆக்ஷன் படம்.
முற்றிலும் வித்தியாசமான சிலம்பரசனை பார்க்கப் போகிறீர்கள்.
மேலும் திரைக்குப்பின்
Your Ad Here
Site Meter