முதல் பக்கம் » சினிமா » திரைக்குப்பின்

Tamil Movie Celebrity Prithvi, Vijayan, Jyothika, Karthika, Simran, Sridevi, Tamil Movie Actor, Actress Interview

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - கார்த்திகா

Karthika Tamil Celebrity I AM NOT TO ACT GLAMOUR ROLES - KARTHIKA
தூத்துக்குடி, பிறப்பு, நாளைய பொழுது உன்னோடு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கார்த்திகா. குடும்ப கதாபாத்திரத்திற்கு இவர் அழகாகப் பொருந்துவார். இதுவரை நடித்த படங்களிலும் அத்தகைய கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். இனி அவரைப் பற்றி...

உங்களின் சொந்த ஊர் மற்றும் குடும்பம் பற்றி...

எனது சொந்த ஊர் புதுக்கோட்டை. பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில். எனக்கு ஒரு அண்ணனும் தங்கையும். அப்பா இறந்தபிறகு அம்மாவின் அரவணைப்பில் ஒன்றாக வசிக்கிறோம். அண்ணன் பாலா வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். தங்கை சிதா பத்தாம் வகுப்பு படிக்கிறார்.

சினிமாத்துறையில் ஆர்வம் எப்படி?

எனது அப்பா அடைக்கலம் சிவாஜி புரொடக்ஷனில் மேலாளராக வேலை பார்த்தவர். அப்படிதான் சினிமா எங்கள் குடும்பத்தோடு ஒன்றியது. சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.

முதன்முதலாக திரையில் தோன்றியது எப்போது?

பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு 2005-ம் ஆண்டு மாடலிங் துறைக்குள் வந்தேன். விளம்பரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது "தூத்துக்குடி" பட இயக்குநர் சஞ்சய் என்னை அணுகி இப்படத்தில் நடிக்கக் கூறினார்.

அடுத்து படிக்கும் எண்ணம் உண்டா?

நிச்சயம் படிப்பேன். தற்போது சினிமாவில் பிஸியாக இருப்பதால் படிப்பது பற்றி முடிவெடுக்கவில்லை. தொலைதூரக் கல்வியின் மூலம் படிக்க விருப்பம்.

முதல் பட அனுபவம் எப்படி?

எல்லோரையும் போல காமிரா முன் நிற்கும் போது பரீட்சைக்குப் போவது போல் பதட்டமாக இருந்தது. ஆனால் அங்குள்ளவர்களுடன் பழகியவுடன் பதட்டம் தணிந்து சாதாரணமாக நடிக்க ஆரம்பித்து விட்டேன்.

கதைக்குத் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பேன் என்று சில நடிகைகள் கூறுகிறார்கள். நீங்கள் எப்படி?

எப்படிப்பட்ட சூழலிலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். இக்காரணத்துக்காக ஏற்கனவே நிறைய வாய்ப்புகள் கைவிட்டுப் போயிருக்கிறது.

அடுத்த படங்கள் பற்றிக் கூறுங்கள்?

ஜெகன் இயக்கத்தில் "ராமன் தேடிய சிதை" பாடல்கள் வெளியீடு முடிந்து வெளியாகத் தயாராகவுள்ளது. ஐந்து கதாநாயகிகளில் நானும் ஒருத்தி. எல்லோருடைய கதாபாத்திரத்துக்கும் தனித்துவம் உண்டு.

என்னுடைய பாத்திரம் ஒரு ஜாலியான, கலாட்டாவான கல்லூரிப் பெண். அடுத்ததாக கே.ராகவன் இயக்கத்தில் "அலையோடு விளையாடு". இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. புதுமுகம் விஜயன் கதாநாயகன். மீனவ கிராமத்தில் பிறந்து நகரத்தில் படிப்பை முடித்துவிட்டு மீண்டும் கிராமத்திற்கு வரும் கதாபாத்திரம் எனக்கு. மற்றும் பாண்டியராஜன் மகன் பிருத்வியுடன் "வைதேகி" என்ற படமும் கைவசம் உள்ளது.

புதுமுக கதாநாயகர்களுடன் அதிகம் நடிப்பதற்கு என்ன காரணம்?

கதையும், என்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவமும்தான் எனக்கு வேண்டும். மற்றபடி எந்த கதாநாயகராக இருந்தாலும், இயக்குநராக இருந்தாலும் எனக்குப் பிரச்னை இல்லை. நல்ல கதையுடன் யார் என்னை அணுகினாலும் நான் நடிப்பேன்.

 

முதலில் நான் கதையைக் கேஉங்கள் படங்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்? ட்பேன். பின்பு என் அம்மா, அண்ணன், எனது மேலாளர் சக்தி எல்லோரும் கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம். எனது குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லையென்றால் அதில் நடிக்க ஒத்துக்கொள்ள மாட்டேன். சில கதைகளை நானே கேட்டவுடன் மறுத்துவிடுவேன்.

நடிப்பு தவிர வேறெதிலெல்லாம் ஈடுபாடு?

நடனத்தில் ஈடுபாடு அதிகம். பரதம் ஒரு வருடம் பயின்றேன். மெல்லிசை மிகப்பிடிக்கும். வீட்டில் பாடல்கள் போட்டு நடனமாடுவதுண்டு. நன்றாகத் தூங்குவேன்.

மேடை நிகழ்ச்சிகள் ஒன்றிலும் உங்களைப் பார்க்க முடியவில்லையே?

அண்மையில் நடந்த சிங்கப்பூர், மலேசியா கலை நிகழ்ச்சியின்போது படப்பிடிப்பு நடைபெற்றதால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. வாய்ப்புகள் வரவில்லை, வாய்ப்புகள் கிடைத்தால் என் திறமையைக் கட்டாயம் வெளிப்படுத்துவேன்.

உங்களுக்குப் பிடித்த நாயகன், நாயகி யார்?

எல்லா கதாநாயகர்களையும் ரசிப்பேன். எல்லோரிடமிருந்து நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வேன். சிறுவயதிலேயே
ஸ்ரீதேவி என்றால் மிகவும் பிடிக்கும். ஜோதிகா, சிம்ரன் ஆகியோர் இன்று களத்தில் இல்லாவிட்டாலும் அவர்களை யாராலும் மறக்க முடியாது. அதுபோன்று என் பெயரையும் நிலை நிறுத்த வேண்டும் என்பதே என் ஆசை.

உடலை எவ்வாறு பராமரிக்கிறீர்கள்?

நான் எந்த விதமான உடற்பயிற்சியும் செய்வதில்லை. உணவுக் கட்டுப்பாடுகளும் கிடையாது. நன்றாகச் சாப்பிடுவேன். மீன் என்றால் ஒரு கை பார்த்துவிடுவேன். இயற்கையாகவே என் உடல்வாகு இப்படித்தான் என்கிறார், இந்த உலக அழகி... கார்த்திகா.

மேலும் திரைக்குப்பின்
Your Ad Here
Site Meter