முதல் பக்கம் » சினிமா » திரைமுன்னோட்டம்

Thozha Tamil Movie Preview

தோழா

 (

Thozha

)

அரோவணா பிலிம்ஸ் என்ற புதிய நிறுவனம் தோழா என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. இதில் சென்னை-28 படத்தில் நடித்த நிதின்சத்யா, பிரேம்ஜி அமரன், அஜய்ராஜ், விஜய் நடிக்க, இவர்களுடன் அறிமுக நாயகிகளாக சாகித்யா, ஜெனிஃபர், லக்ஷனா (மிஸ்பெங்களூர்) மற்றும் சௌமியா நடிக்கின்றனர். இப்படத்தில் டெல்லி குமார், பாபிலோனா, சசி, மூணாறு ரமேஷ், அஜய் ரத்னம், கவிதாலயா கிருஷ்ணன், கிரேன் மனோகர் மற்றும் பல முன்னணி நடிகர்கள் பங்கேற்கிறார்கள். இதுதான் வாழ்க்கைன்னு எந்த கவலையும் இல்லாமல் வாழ்கிற நான்கு நண்பர்களின் வாழ்க்கையில் திடீரென அதிர்ச்சியான ஒரு சம்பவம் நிகழ்கிறது. இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதை நகைச்சுவையோடு சொல்லப்போகிறார்கள். தோழா படத்தின் தயாரிப்பாளர்கள் மிகுந்த பொருட்செலவிலும் பெரிய பட்ஜெட்டிலும் படமாக்கப்பட்டு வருகின்றனர். அதற்கான இறுதிகட்ட படிப்பிடிப்பு முடிந்து எடிட்டிங் வேலை இரவு பகலாக நடந்து வருகிறது. படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது. பிரேம்ஜி அமரன் நடித்து இசை அமைக்கும் படம் என்பதால், தொழில்நுட்பத்துடன் பாடல்களை பதிவு செய்துள்ளார். இதில் பாக்கியராஜ் நடித்த தாவணி கனவுகள் படத்தில் இடம் பெற்ற ஒரு நாயகன் என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. இந்தப்பாடல்களுக்கான காட்சி ஏ.வி.எம்-ல் ஆர்ட் டைரக்டர் ஜனா கைவண்ணத்தில் பிரமாண்டமான முறையில் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு காதல் பாடல் காட்சிக்கு பொள்ளாச்சி மற்றும் மேற்கு மலைத் தொடர்ச்சியில் இயற்கை எழில் சூழ்ந்த இதுவரை எவரும் படம் பிடிக்காத இடத்தில் படமாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இசை கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன், நடனம்- அஜய்ராஜ், ஒளிப்பதிவு- தனா, எடிட்டிங்- சாய்சுரேஷ், பாடல்கள்- கங்கை அமரன், சினேகன், சண்டைப்பயிற்சி- சுப்ரீம் சுந்தர், தயாரிப்பு மேற்பார்வை- கே.அண்ணாதுரை, தஞ்சை கே.மோகன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- என்.சுந்தரேஸ்வரன். இப்படத்தை எம்.பழனி, எம்.சுரேஷ்குமார், வி.பாஸ்கரன், பி.பரமசிவம் ஆகியோர் தயாரிக்க, படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் சென்னையில் துவங்கி தொடர்ந்து பொள்ளாச்சி, கும்பகோணம், காரைக்குடி மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை பிப்ரவரியில் வெண்திரையில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். முற்றிலும் மாறுபட்ட உருக்கமான நட்பை சொல்லும் இந்த நண்பர்கள் கதையில் மட்டுமல்லாமல் உண்மையிலும் நண்பர்கள் தான். செட்டில் நுழைந்து விட்டால் ஒரே ரகளை தான்.

Site Meter