வெண்ணிலா கபடி குழு
(11/8/2008)
"வெண்ணிலா கபடி குழு" படத்தில், விஷ்ணு கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். (போலீஸ் ஐ.ஜி. ரமேஷ் குடவாலாவின் மகன்) "எம்.பி.ஏ." முடித்துவிட்டு ஒரு "சாப்ட்வேர்" நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், இந்த படத்தில் "கபடி" வீரராக நடிக்கிறார். கிரிக்கெட் வீரரான விஷ்ணு, படத்துக்காக தேசிய கபடி பயிற்சியாளர் ஒருவரிடம் கபடி பயிற்சி பெற்றார். இது, விளையாட்டை அடிப்படையாக கொண்ட படமாக இருந்தாலும், விஷ்ணுவின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து ஒரு வர்த்தக ரீதியிலான படமாக தயாராகி வருகிறது. கதாநாயகியாக, சரண்யா மோகன் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் டைரக்டராக சுசிந்திரன், ஒளிப்பதிவாளராக ஜே. லஷ்மண்குமார், இசையமைப்பாளராக செல்வகணேஷ் அறிமுகம் ஆகிறார்கள். கலை: ஜி.சி. ஆனந்தன், பாடல்கள்: நா.முத்துகுமார், சினேகன், பிரான்சிஸ் கிருபா, கார்த்திக் நேதா ஆகியோர் எழுதியுள்ளனர். இமாஜின் கிரியேசன்ஸ் சார்பில் கே.ஆனந்த் சக்ரவர்ததி இப்படத்தை தயாரிக்கிறார்.


Tamil Horoscope
Exclusive Tamil Actress Pictures
CHANDRAYAAN-1
Tamil Online Free eGreetings eCards
Latest Tamil Movies Online Website
Tamilnadu Classifieds - Koodal Business Link