காவலர் குடியிருப்பு
(5/19/2009)
1992 ஆண்டு பெங்களூர் காவலர் குடியிருப்பில் நடந்த ஒரு உண்மை சம்பவம் காவலர் குடியிருப்பு என்ற பெயரில் படமாகிறது. இது ஒரு காதல் ஜோடியை பற்றிய கதை. கதை சம்பவம் நடைபெற்ற அதே வருடம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்படதற்கும் என்ன தொடர்பு? என்பதை கதை சித்தரிக்கிறது. அனிஷ் தேஜஷ்வர் கதாநாயகனாகவும், சோனு கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் ஷரண், அவினாஷ், சரண்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். துவாரகநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை ஏ.எம்.ஆர். ரமேஷ் கவனிக்கிறார். இவர் குப்பி படத்தை டைரக்டு செய்தவர். வசிஷ்டா பிக்சர்ஸ் சார்பில் எஸ். இந்துமதி, அனிதா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.


Tamil Horoscope
Exclusive Tamil Actress Pictures
CHANDRAYAAN-1
Tamil Online Free eGreetings eCards
Latest Tamil Movies Online Website
Tamilnadu Classifieds - Koodal Business Link