டைட்டில் ரோலில் கீர்த்தி சாவ்லா நடிக்கும் படம் "சுவேதா 5/10 வெலிங்டன் ரோடு". முழுக்க முழுக்க த்ரில்லர் கதையில் உருவாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சஞ்சய் இயக்குகிறார். சமீபத்தில் குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்பட்டு விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் அதிக லாபம் சம்பாதித்து கொடுத்த "சிலந்தி" படத்தைப் போல் இந்தப் படத்தையும் த்ரில்லருக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜே. ஸ்டூடியோ தயாரித்து வருகிறது. "ஒரு இரவு நேரத்தில் கீர்த்தி சாவ்லா ஒரு நெகடிவ் கேரக்டரிடம் சிக்கிக் கொள்கிறார். அந்த நெகடிவ் கேரக்டரிடம் இருந்து கீர்த்தி சாவ்லா எப்படி தப்பிக்கிறார் என்பதை எந்தளவுக்கு த்ரில்லிங்காக சொல்லமுடியுமோ அந்தளவுக்கு பரபரப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறேன்" என்கிறார் இயக்குனர் சஞ்சய். இதில் கீர்த்தி சாவ்லாவுக்கு ஜோடியாக புதுமுகம் ஒருவர் நடிக்கிறார். மூன்று முக்கிய கேரக்டர்களை மையமாக வைத்து நகரும் கதையில் நாயகன், நாயகி தவிர மூன்றாவது கேரக்டரை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். முழுப்படத்தையும் நைட் எஃபெக்ட்டில் எடுத்திருக்கிறார்கள். கல்லூரி மாணவியாக நடிக்கும் கீர்த்தி சாவ்லா இதுவரை தான் நடித்த படங்களிலேயே உச்ச கட்டமாக இதில் க்ளாமராக நடித்திருக்கிறார். ஐம்பது சதவீத வசனக்காட்சிகள் முடிந்துள்ள நிலையில் ஒரு பாடல் காட்சியை அந்தமானில் படமாக்கியிருக்கிறார்கள். சென்னை, கேரளா மற்றும் அந்தமான் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படம் 30 நாட்களில் உருவாகி, குறுகிய கால தயாரிப்பாக வெளிவர இருக்கிறது. ஜி. கம்பெனி ரிலீஸ் செய்யும் இந்தப் படத்துக்கு சூர்யா இசையமைக்க, எஸ்.விவேக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்: சஞ்சய்.