தொட்டுச் செல்லும் தென்றலே
(6/29/2009)
கல்லூரி மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்துவிட்டு சென்ற பசுமையான காலங்களை நினைத்து ஏங்கும் நிகழ்வுகளை கருவாக வைத்து ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, "தொட்டுச் செல்லும் தென்றலே" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மயூரா சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கும் இந்த படத்தில் புதுமுகம் ஸ்ரீதேவ் கதாநாயகனாக நடிக்க, புதுமுகம் ரிஷா கதாநாயகி ஆகிறார். இவர்களுடன் முத்துக்காளை, சத்யா, டாக்டர் சந்திரசேகர் ஆகியோரும் நடித்துள்ளனர். இசை - குருஷேவ், கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, டைரக்ஷன்: ஆர்.மாணிக்கம். படப்பிடிப்பு மதுரை, திருச்சி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. படம், அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.


Tamil Horoscope
Exclusive Tamil Actress Pictures
CHANDRAYAAN-1
Tamil Online Free eGreetings eCards
Latest Tamil Movies Online Website
Tamilnadu Classifieds - Koodal Business Link