முதல் பக்கம் » சினிமா » திரைமுன்னோட்டம்

Kalluli Mangan Tamil Movie Preview

கல்லுளி மங்கன்

 (

Kalluli Mangan

)

கே.பாலசந்தர், சுந்தர் கே.விஜயன் ஆகிய இருவரிடமும் உதவியாளராக இருந்தவர், ஜெய்குருதேவ். இவர், முதன்முதலாக ஒரு படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்துக்கு, "கல்லுளி மங்கன்" என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. கதாநாயகனாக ராஜ்வர்மா அறிமுகம் ஆகிறார். கதாநாயகியாக, கன்னட நடிகை ஜான்வி அறிமுகம் ஆகிறார். ஜெய்சூர்யா, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பேட்டரிக் இசையமைக்க, அப்துல்கலாம் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் கதையை நீலகண்டன் எழுதியிருக்கிறார். திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ஜெய்குருதேவன். சூப்பர் ஸ்கிரீன் பிளேயர்ஸ் நிறுவனம் சார்பில் மீனா கதிரேசன், நீலகண்டன், சரஸ்வதி ஆறுமுகம் ஆகிய மூவரும் தயாரிக்கிறார்கள். ஒரு திருமணத்தில் தாலி கட்டும்போது நடந்த குழப்பத்தை கருவாக கொண்ட படம் இது. தஞ்சை மாவட்டத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. படப்பிடிப்பு காரைக்குடி, தேனி, பொள்ளாச்சி, தஞ்சை, பேராவூரணி பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

Site Meter