உத்தரவு
(1/12/2010)"பாஞ்சாலங்குறிச்சி", "இனியவளே", "தம்பி", "வாழ்த்துகள்" ஆகிய படங்களை இயக்கியவர், சீமான். இலங்கை தமிழர்கள் பிரச்சினையின்போது, அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஜெயிலுக்கு போனவர். சமீபத்தில் திரைக்கு வந்த "மாயாண்டி குடும்பத்தார்" படத்தில், சீமான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவர் முதன்முதலாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அந்த படத்துக்கு, "உத்தரவு" என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. சீமான் ஜோடியாக ஆந்திர அழகி சாந்தினி அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் நாசர், கஞ்சா கருப்பு, அலெக்ஸ், சிங்கம்புலி, சிங்கமுத்து மற்றும் பலரும் நடிக்கிறார்கள். படத்தில், இன்னொரு கதாநாயகியும் பங்கு பெறுகிறார். முக்கிய வில்லன் வேடத்தில், இயக்குனர் மனோஜ்குமார் நடிக்கிறார். சீமான், இந்த படத்தில் பரிசல் ஓட்டும் இளைஞராக நடிக்கிறார். கதாநாயகன் ஆகிவிட்டதால் அவர், சண்டை மற்றும் நடன பயிற்சி பெற்று வருகிறார். பா.விஜய், சினேகன், தாமரை ஆகிய மூன்று பேரும் பாடல்களை எழுத, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். "மருதுபாண்டி", "சாமுண்டி", "மறவன்", "ஆர்யா" உள்பட பல படங்களை இயக்கிய மனோஜ்குமார், இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குகிறார். ராஜகுரு பிலிம்ஸ் சார்பில் படம் தயாராகிறது. இணை தயாரிப்பு: லட்சுமி பிரியா, புவனேஸ்வரன். படப்பிடிப்பு விசாகப்பட்டினம், ஐதராபாத், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. பாடல் காட்சிகளை சுவிட்சர்லாந்தில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
மேலும் திரைமுன்னோட்டம்









