ஒரு படித்த இளைஞன், ஒரு படிக்காத இளைஞன், ஒரு அனாதை இளைஞன் ஆகிய மூன்று பேரும் வாழவேண்டிய வயதில், வழி தவறுகிறார்கள். அந்த மூன்று பேரின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை கதைக்களமாக கொண்ட படம், "புழல்". இதில், புதுமுகங்கள் முரளி, மனோ, ஹேமசந்திரன், அர்ச்சனா, அஸ்வதா, "காதல்" சுகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். சினேகன் பாடல்கள் எழுத, நல்லதம்பி என்ற புதிய இசையமைப்பாளர் இசையமைக்கிறார். கே.நித்யா ஒளிப்பதிவு செய்கிறார். ஆக்ஷன் பிரகாஷ் சண்டையை கவனிக்கிறார். திரைக்கதை-வசனத்தை வழக்கறிஞர் ஜி.கே.லோகநாதன் எழுதியிருக்கிறார். கதை எழுதி இயக்குகிறார், அழகு. இவர், "சூப்பர்டா", "தத்தித்தாவுது மனசு" ஆகிய படங்களை இயக்கியவர். கிளாசிக் மூவீஸ் சார்பில் டி.தமிழ் அமுதன் தயாரிக்கிறார்.