திருப்பூர்
(2/6/2010)
ஃப்ரெண்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் "திருப்பூர்". நான்கு உயிர் நண்பர்களின் கதை இது. நான்கு நண்பர்களும் பழநியில் வாழ்கின்றனர். படத்தின் கதாநாயகி திருப்பூரில் இருந்து கல்லூரி கேம்பிற்காக பழநி வருகிறார். நண்பர்களில் ஒருவருக்கும் கதாநாயகிக்கும் இடையில் காதல் மலர்கிறது. கேம்ப் முடிந்ததும் கதாநாயகி திருப்பூர் சென்று விடுகிறாள். பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் திரைக்கதை. இதில் பிரபா, உதயா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களில் பிரபா ஏற்கெனவே வெளியான "பிறப்பு" மற்றும் தற்போது தயாராகி வரும் "தோழி" ஆகிய படங்களில் நடித்துள்ளார். உதயா, "உளியின் ஓசை" படத்தில் நடித்தவர். கதாநாயகியாக "மிட்டாய்" உன்னிமாயா நடிக்கிறார். மற்ற இரு நண்பர்களாக சர்வமதி, பத்மகுமார் அறிமுகமாகின்றனர். இவர்களுடன் "காதல்" தண்டபாணி, "மகாநதி" சங்கர், மாணிக்க விநாயகம், எலிசபெத் ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக ஸ்ரீதர் அறிமுகமாகிறார். இப்படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி எம்.சி. துரைசாமி இயக்குகிறார். எஸ். பாலா ஒளிப்பதிவில் சி.டி. ராஜு இசையமைக்கிறார். சதீஷ் எடிட்டிங்கில், "நாக் அவுட்" நந்தா சண்டைப்பயிற்சி அளிக்க, ஜெ.பி. ஆறுமுகம் தயாரிப்பு நிர்வாகத்தில், பழனிபாரதி பாடல்கள் எழுதுகிறார். ஆர். தர்மராஜ் தயாரிக்கிறார். படப்பிடிப்பு பழநி, பொள்ளாச்சி, திருப்பூர், கொடைக்கானல் மற்றும் அந்தமான் தீவில் நடைபெற்று வருகிறது. 2 பாடல் காட்சிகள், அந்தமானில் படமாக்கப்பட்டன.


Tamil Horoscope
Exclusive Tamil Actress Pictures
CHANDRAYAAN-1
Tamil Online Free eGreetings eCards
Latest Tamil Movies Online Website
Tamilnadu Classifieds - Koodal Business Link