முதல் பக்கம் » சினிமா » திரைமுன்னோட்டம்

Naan Mahaan Alla Tamil Movie Preview

நான் மகான் அல்ல

 (

Naan Mahaan Alla

)

"நான் மகான் அல்ல" என்ற பெயரில் ரஜினிகாந்த் நடித்து, பல வருடங்களுக்கு முன்பு ஒரு படம் திரைக்கு வந்தது. இப்போது அதே பெயரில், கார்த்தி நடிக்கும் ஒரு புதிய படம் தயாராகிறது. "பருத்திவீரன்", "ஜில்லுன்னு ஒரு காதல்", "சிங்கம்" ஆகிய படங்களை தயாரித்த ஸ்டுடியோ கிரீன், கே.ஈ.ஞானவேல் தயாரிக்கும் படத்திற்கு "நான் மகான் அல்ல" என்று பெயர் வைத்துள்ளார். "பருத்திவீரன்", "ஆயிரத்தில் ஒருவன்", "பையா" என தொடர் வெற்றிகளை குவிக்கும் கார்த்தி இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். நக்கல், நையாண்டி பண்ணிக்கிட்டு தனது வாழ்க்கையை பற்றி கவலைப்படாமல் வாழும் கதாபாத்திரமாக கார்த்தி நடிக்கிறார். "வெண்ணிலா கபடிகுழு" படத்தை இயக்கிய சுசீந்திரன், இந்த படத்தின் கதை- திரைக்கதை எழுதி, இயக்குகிறார். இசை: யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு: மதி, வசனம்: பாஸ்கர் சக்தி, பாடல்கள்: நா.முத்துகுமார், யுகபாரதி, பிரான்சிஸ். எடிட்டிங்: காசி விஸ்வநாதன், கலை: ராஜீவன், ஸ்டண்ட்: அனல் அரசு, நடனம்: சபீனாகான், பாபா பாஸ்கர். தயாரிப்பு: கே.ஈ.ஞானவேல் ராஜா. இணை தயாரிப்பு: எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.

Site Meter