Singamuthu got conditioned bail! (03 Mar 2010)
நடிகர் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்தவர் சிங்கமுத்து. இவர் வடிவேலுவுக்கு நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, அரசு புறம்போக்கு இடம் மற்றும் சுடுகாட்டு நிலத்தை மோசடியாக விற்று ரூ.7 கோடி வரை ஏமாற்றி விட்டாராம். இதுபற்றி கேட்டபோது வடிவேலுவுக்கு கொலை மிரட்டலும் விடுத்தாராம் சிங்கமுத்து. எனவே சில தினங்களுக்கு முன்பு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து இதுகுறித்த ஆதாரங்களுடன் புகார் தந்தார் வடிவேலு. இந்த புகார் தொடர்பாக சிங்கமுத்துவை போலீசார் தேடினர். ஆனால் அவரோ சில பலமான மனிதர்கள் மற்றும் சாதி அமைப்புகளின் துணையுடன் வடிவேலுவை பதிலுக்கு மிரட்டி வந்தாராம். சென்னையிலேயே பதுங்கி இருந்தபடி, முன் ஜாமீனும் பெற்றுவிட்டார். இன்னொரு பக்கம் வடிவேலுவுடன் சமாதானம் பேசவும் முயன்று வந்தாராம். வடிவேலுவை பலமுறை தொடர்பு கொண்டு சிங்கமுத்து சார்பில் சமாதானத்துக்கு சிலர் அழைத்துள்ளனர். இதனால் கடுப்பான வடிவேலு, சில தினங்களுக்கு முன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிங்கமுத்து மீது இரு வழக்குகள் தொடர்ந்தார். இந் நிலையில் இந்த வழக்கில் நிபந்தனையுடனான முன்ஜாமீன் பெற்ற சிங்கமுத்து சென்னை கிரைம் பிராஞ்ச் போலீசில் நேற்று கையெழுத்திட வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், நடிகர் வடிவேலு முன்வந்தால் அவருடன் சமாதானமாகப் போகத் தயாராக இருக்கிறேன். என் பக்கம் எந்தத் தவறும் இல்லை என்றார். இந்த ஓட்டத்தால் தடைபட்டிருந்த சிங்கமுத்துவின் மகன் வாசனின் பட வேலைகளும் ஸ்தம்பித்து போயிருந்தன. இனி சுதந்திரமாக செயல்படுவார்கள் வாசனும், சிங்கமுத்துவும். ஆனால் அதற்குள் வேறு ஏதாவது பிரச்சினை வராமல் இருந்தால் சரி!
Poet Pa.Vijay in poetic story of Kalaignar! (03 Mar 2010)
ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளுக்கு கூட கிடைக்காத அதிர்ஷ்டம், பாட்டெழுதுகிற காரணத்தால் பா.விஜய்க்கு கிடைத்திருக்கிறது. நினைத்தால் போதும். முதல்வரை சந்திக்கலாம் என்கிற அளவுக்கு தாழ்ப்பாளை திறந்துவிட்டிருக்கிறது தமிழ். முதல் படமான ஞாபகங்கள், பா.விஜய்க்கு அழியாத ஞாபகத்தை விட்டு சென்றாலும், கதாநாயகன் ஆசை அவரை விட்டு போவதாக இல்லை. பலத்த முயற்சிக்கு பின் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தன்னை நிரூபிக்க நாள் குறித்துவிட்டார் கவிஞர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, முன்னணி கதாநாயகிகளில் ஒருவருக்கு தூண்டில் என்று அதிரடியாக திரை கட்ட தயாராகிவிட்டதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். எல்லாவற்றும் சிகரம் வைத்தாற் போல ஒரு முக்கிய சமாச்சாரம். கலைஞரின் பாயும் புலி பண்டாரக வன்னியன் கதையைத்தான் படமாக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் இவர்கள். இதற்கு தலைவரின் ஆசியும் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சரித்திரக் கதையை படமாக்க வேண்டுமென்றால் எக்கச்சக்க செலவாகுமே? பின்ன... இந்த படம் இருபது கோடி பட்ஜெட்டில் தயாராகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
Asin planned out for an Art Exhibition! (02 Mar 2010)
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் அசின். இந்திப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததால், தமிழ் உள்ளிட்ட தென்மாநில மொழிப் படங்களை புறக்கணித்து இந்திக்குப் போனார். அவர் அமீர்கானுடன் நடித்த கஜினி படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. வசூலை வாரிக் குவிக்க, அசினுக்கு வரிசையாக பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவர் லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் மட்டும் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் இந்தப் படம் படுதோல்வியடைய, அதுவரை அசின் வீட்டில் அவரது கால்ஷீட்டுக்கு தவம் கிடந்த தயாரிப்பாளர்கள் மாயமாகினர். எனவே பட வாய்ப்புகள் இல்லாததால் ஓவியம் வரைவதில் பொழுதைக் கழித்தார் அசின். ஓவியம் வரையும் நேரம் போக, மீதி நேரங்களில் தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிப் படங்களில் வாய்ப்பு கேட்டு வருகிறார். இதன் பலனாக நான்கு புதிய தமிழ்ப் படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவற்றில் இரண்டு படங்களில் விஜய் நடிக்கிறார். ஆனால் இந்தப் படங்கள் உடனடியாகத் துவங்கும் நிலையில் இல்லையாம். இன்னும் நான்கைந்து மாதங்களாவது ஆகும் என்பதால், தான் இதுவரை வரைந்து தள்ளிய ஓவியங்களை வைத்து தனி கண்காட்சி நடத்த முடிவு செய்துள்ளார் அசின். கண்காட்சிக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளாராம் அசின்.
Holi celebrations - Shreya, Tamanna (02 Mar 2010)
ஸ்ரேயா கொச்சியில் போக்கிரி ராஜா என்ற மலையாள படப்பிடிப்பில் இருந்தார். அங்கு படப்பிடிப்புக்கு சிறிது இடைவெளி விட்டு ஹோலி கொண்டாடினார். தயாராக கொண்டு வந்திருந்த கலர் பொடியை துணை நடிகைகள் மீது அள்ளி வீசினார். தண்­ணீரையும் பீய்ச்சி அடித்தார். ஹோலி கொண்டாட்டம் பற்றி அவர் கூறியது: ஹோலி பண்டிகை கொண்டாடுவதில் எனக்கு ரொம்ப இஷ்டம். தோழிகள் மேல் கலர் தண்ணீ­ரை பீய்ச்சி அடிப்பதில் அலாதி பிரியம் உண்டு. சிறு வயதில் கலர்பொடி பட்டால் தோலில் வியாதி வரும் என்று என் தாயார் பயமுறுத்தி வீட்டுக்குள் வைத்திருப்பார். அதை மீறி வெளியே ஓடி விடுவேன். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் மேல் எல்லாம் கலர் பொடி, கலர் தண்­ணீரை அடிப்பேன். பலரிடம் இதற்காக திட்டும் வாங்கி இருக்கிறேன். இந்த வருடம் வீட்டில் ஹோலி கொண்டாட முடியாமல் போனது வருத்தம்தான் என்றார். தம்மு என செல்லமாக அழைக்கப்படும் தமன்னா மும்பையில் உள்ள தனது வீட்டில் ஹோலி பண்டிகை கொண்டாடினார். இதுபற்றி தமன்னா கூறியது: ஹோலி பண்டிகையில் முட்டை வீசுவது என் சிறுவயது பழக்கம். தோழிகள் ஒருத்தருக்கொருத்தர் மாறி மாறி முட்டை வீசுவோம். இதனால் பல தடவை எங்களுக்குள் சண்டையே வந்து இருக்கிறது. சுத்தமாக இருப்பது தான் எனக்கு பிடிக்கும். தோழிகள் மிஸ் கிளீன் என்று தான் அழைப்பார்கள். அப்படிப்பட்ட நான் ஹோலினா முழுசா மாறிடுவேன். கலர் தண்ணியும், கலர் பொடியும் அடிக்க யார் வந்தாலும் முகத்தை காட்டிகிட்டு நிற்பேன். அடையாளம் காணமுடியாத அளவுக்கு ஆயிடுவேன். மும்பையில் தான் என் குடும்பத்தினர் உள்ளனர். அவர்களுடன் தான் இப்பண்டிகையை கொண்டாடுவேன். இந்த வருடமும் இன்று படப்பிடிப்பு இல்லாததால் அவர்களுடன் கொண்டாடுகிறேன். உறியடி விழா ஒவ்வொரு முறையும் நடக்கும். அதிலும் கலந்து கொண்டு உறியடிப்பேன். ரொம்ப த்ரில்லிங்கான அனுபவம். இன்னைக்கு மட்டும் கண்டபடி சாப்பிடுவேன். அம்மா சத்தம் போடுவார். இன்னைக்கு ஒருநாள் மட்டும் சாப்பாடு விஷயத்தில் தடை போடாதீங்கன்னு அவரை சமாதானப் படுத்திவிடுவேன். சமீபத்தில் திருமணம் செய்த ஷில்பாஷெட்டி இன்று மாலை நடிகர்-நடிகைகளுக்கு ஹோலி பண்டிகை விருந்து கொடுக்கிறார். அதற்காக அவரது கணவரே விருந்துக்கான உணவு வகைகளை தயார் செய்து வருகிறாராம்.
Sharanya pairs up Tharun Gopi (02 Mar 2010)
பேராண்மை படத்திற்குப் பிறகு தருண் கோபியுடன் சரவண குடில் என்ற படத்தில் நடித்து வருகிறார் சரண்யா. இதுகுறித்து அவர் கூறியது: பேராண்மைக்கு பிறகு அதே போன்று துப்பாக்கி தூக்கும் கதாபாத்திரங்கள் நிறைய வந்தது. ஆனால் ஒப்புக்கொள்ளவில்லை. விளையாட்டு படத்தில் பாவாடை, தாவணி கட்டி நடித்தேன். அது எல்லோருக்கும் பிடித்தது. ஆனால், ரசிகர்களை சென்று சேரவில்லை. இதையடுத்து சரவண குடில் படத்தில் மீண்டும் பாவாடை, தாவணியில் நடிக்கிறேன். ரசிகர்கள் மனதில் நல்ல பொண்ணு என்ற பெயரில் நுழைய வேண்டுமென்றால் அதற்கு பாவாடை, தாவணிதான் சரியான வழி. இன்னும் சில படங்களில் பாவாடை தாவணியில் நடித்து விட்டு, பிறகு கவர்ச்சியில் கலக்க வேண்டியதுதான் என்று கூறினார்.


Tamil Horoscope
Exclusive Tamil Actress Pictures
CHANDRAYAAN-1
Tamil Online Free eGreetings eCards
Latest Tamil Movies Online Website
Tamilnadu Classifieds - Koodal Business Link