முதல் பக்கம் » சினிமா » திரை விமர்சனம் » லட்சியம்

LATCHIYAM Movie Review

லட்சியம்

-

LATCHIYAM

Tamil Movie - LATCHIYAM Review - Lawrence Raghavendra, Prabhu Deva, Varnan, Charmi, Kamalinee Mukherjee, Mani Sharma,  Tamil Movie Actor, Actress

ஒரு தாய் ஆசையை நிறைவேற்ற மகன் நடன கலைஞனாகி புகழ் பெறும் கதை....

நடனத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் கணேஷ்- ஆண்டனி. இருவருக்கும் நடக்கும் நடனப் போட்டியில் கணேஷ் ஜெயித்து வெளிநாட்டுக்கு செல்ல தேர்வாகிறான்.

தம்பி தோல்வியை தாங்க முடியாத ஆண்டனியின் அண்ணன் லாரியை ஏற்றி கணேஷ் கால்களை துண்டாக்குகிறான். முடமான அவனை எதிர் கோஷ்டி ஏளனம் செய்கிறது.

இன்னொரு புறம் நடனத்தில் ஆர்வம் உள்ள ராகவா நடனப் பள்ளியொன்றில் துப்புரவு வேலை பார்க்கிறார். பெரிய நடன கலைஞராவது லட்சியம். ஏழ்மை தடுக்கிறது.

ஒரு கட்டத்தில் டெலிவிஷனில் ராகவாவின் நடனத்தை பார்த்து வியக்கும் கணேஷ் அவனை பெரிய நடனக்கலைஞனாக்கி எதிரிகள் முகத்தில் கரியை பூச களம் இறங்குகிறான். ராகவாவுக்கு நடன பயிற்சி அளித்து ஆண்டனியிடம் மோத விட திருப்பம். எதிரிகளால் காலில் குண்டடி பட்டு வீழ்கிறான். லட்சியத்தில் ஜெயித்தானா? என்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ்....

நாயகனாக வரும் ராகவா லாரன்ஸ் நடன கலைஞராக வெளுத்துள்ளார். வீடு வீடாக நடனப் பள்ளிக்கு இடம் கேட்டு அவமானப்படுவது, அப்பள்ளியை அதிகாரிகள் இடிக்கும் போது நொறுங்குவது... காதல் தோல்வியில் இடிவது... இதயங்களை பிழிகின்றன.

தாயை பிரியும் சிறுவயது பிளாஸ்பேக்.... உயிரோட்டம்... கிளைமாக்ஸ் நடன போட்டி தூள்.

கணேசாக வரும் பிரபுதேவா அமைதியாக வந்து ஆவேசம். நடனத்தில் புயல். போட்டிக்கு தயார் செய்தவர்கள் கடைசி நேரத்தில் காணாமல் போக தவிப்பது நச்...

சார்மி, கமிலினி முகர்ஜி மனதில் நிற்கிறார்கள். வில்லன் வர்ணன், அம்மாவாக வரும் ஜெயசுதா, கோவை சரளா பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள், அம்மா சென்டிமென்ட், நடனம் என அத்தனையும் மெருகூட்டுகின்றன. நடனங்கள் சபாஷ் ரகம்... மணிசர்மா இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன. கபீர்லால் ஒளிப்பதிவு பலம்.

நடிப்பு : பிரபுதேவா, லாரன்ஸ் ராகவேந்ரா, கமலினி முகர்ஷி, சார்மி மற்றும் பலர்
இசை : மணிசர்மா
ஒளிப்பதிவு : கபீர்லால்
இயக்கம் : லாரன்ஸ் ராகவேந்ரா
Your Ad Here
Site Meter