முதல் பக்கம் » சினிமா » பாடல்கள் » தாம் தூம்

Dham Dhoom Tamil Songs Lyrics

வலியே என் உயிர் வலியே

 (

Vazhiye yen uyir vazhiye - Dham Dhoom Lyrics

)

Bombay Jayashree,Chorus,Krish

ஆண்: வலியே என் உயிர் வலியே
நீ உலவுகிறாய் என் விழி வழியே
சகியே என் இளம் சகியே
உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழு மதியே
வெண் பகல் இரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே
உன் அலைகளினால் நீ உரசுறியே

பெண்: யாரோ... மனதிலே... ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே... தீயா... தெரியவே...
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ (வலியே என்...)

(இசை...)

பெண்: மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் மாறுதே
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்லாய் வாழ்கிறேன்
நீயா...
ஆண்: முழுமையாய்

பெண்: நானா...
ஆண்: வெறுமையாய்

பெண்: நாமா... இனி சேர்வோமா... (யாரோ... மனதிலே...)

(இசை...)

பெண்: மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்ததும் உன் கண்கள் தான்
மிருதுவாய் பேசியே என்னுள் வசித்ததும் பார்த்தே தான்
கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா
வெந்நீர்...
குழு: பெண்ணிலா

பெண்: கண்ணீர்...
குழு: கண்ணிலா...

பெண்: நானும்... வெறும் கானலா...

பெண்: யாரோ...
குழு: யாரோ...

பெண்: மனதிலே... ஏனோ...
குழு: ஏனோ...
பெண்: கனவிலே...

பெண்: ஓ... நீயா...
குழு: ஓ... நீயா...

பெண்: உயிரிலே.. தீயா..
குழு: தீயா...

பெண்: தெரியவே...
காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ (வலியே என்...)

Site Meter