முதல் பக்கம் » பெண்கள் » அழகு குறிப்புகள் » கூந்தலின் வளர்ச்சிக்கு...

Hair Loss Remedy

-

கூந்தலின் வளர்ச்சிக்கு...

அழகு குறிப்புகள்:கூந்தலின் வளர்ச்சிக்கு...

கூடல்.காம் - Wednesday, February 20, 2008
Hair Loss Remedy - Beauty Care and Tips in Tamil

கண்ட கண்ட ஆயில், ஷாம்பூ வேணாம்>

கலரிங் பெயரில் கெடுக்கவும் வேணாம்

தலைமுடியை சீராக வைப்பது எப்படி என்று பட்டமே கொடுக்கும் அளவுக்கு பல விஷயங்கள் வந்துவிட்டன.

ஏகப்பட்ட ஆயில்கள், ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் என்று ஏகப்பட்ட வெளிநாட்டு இறக்குமதி சமாசாரங்கள் வந்துவிட்டன. போதாக்குறைக்கு வாண்டூ முதல் வயதான பெரியவர்கள் வரை, தங்களை இன்னும் அழகுபடுத்திக்காட்ட வேண்டும் என்று, கலரிங் செய்யும் கொடுமையும் நடந்து வருகிறது.

தண்ணீரை மாற்றினால்!

வெளியூர் போனால், குடிநீர் குடிக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உள்ளூர் தண்ணீரை குடித்துவிட்டு, வெளியூர் தண்ணீர் குடித்தால், ஒத்துக்கொள்ளாது என்பது சிலருக்கு தெரியாது. குடித்த பின்னர் தொல்லை வரும் போதே உணர்வர். சிலர் ஊர் ஊருக்கு மாறுதல் கிடைக்கும் போது, அவர்கள் குளிக்க பயன்படுத்து தண்ணீர் தன்மையும் மாறுகிறது. இதனால், பாதிக்கப்படுவது அவர்களின் தலைமுடி தான்.

கவலைப்பட்டாலும்...

மேற்கண்ட இரண்டைக் காட்டிலும், முக்கியமானது கவலை தான். ஒருவரின் கவலை தான், அவரின் தலைமுடி கொட்டவும் காரணம். குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். ஆறு மணி நேரமாவது தூங்கினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தலைமுடி ஆரோக்கியத்துக்கும் இது தேவை. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு கவலை தானாக வரும். அப்படியிருக்கும் போது, முடிகொட்டத் தான் செய்யும்.

இதுக்கு என்ன செய்யணும்?

தலைமுடி, இந்த இரண்டு வகையில் எந்த "டைப்" என்று தெரிந்து கொண்டால் தான் நாம் அதற்குரிய ஷாம்பூவை தேர்ந்தெடுக்க முடியும். ஆயில் முடியுள்ளவர்கள், அந்த ஆயிலை நீக்கி சீராக்கும் வகையில் உள்ள "டீப் கிளீன்சிங்" ஷாம்பூவை பயன்படுத்த வேண்டும். வறண்ட தலைமுடி உள்ளவர்கள், கண்டிஷனர் தரம் அதிகம் உள்ளதும், எஸ்.எல்.இ.எஸ்., என்று அழைக்கப்படும் ரசாயனம் கலந்த ஷாம்பூவை பயன்படுத்தினால் நல்லது.

வழுக்கை விழுதே...

ஆண்களில் முடிகொட்டி வழுக்கை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. வானிலை, தண்ணீர், கவலை ஆகிய மூன்று முக்கிய காரணங்கள் தான் பலரின் வழுக்கைக்கு பின்னால் உள்ளவை. கோடை வெயில் பிளந்தாலும், அதிக பனி பெய்தாலும் சிலருக்கு "முடி"வில்லா பிரச்னையாக தான் உள்ளது. கோடையில் வியர்த்து எண்ணெய் முடியாகிவிடுவதும், பனிக்காலத்தில், முடிகள் வறண்டுபோவதும் இவர்களுக்கு நேர்வதுண்டு.

முடிவெட்ட நாலணா

நாலணா கொடுத்து தலைமுடியை கத்தரித்துக்கொள்ளும் காலம் போய்விட்டது; சிகையலங்கார கூடத்தில் போய் முடிவெட்டும் போக்கு, இளைஞர்களிடம் அதிகரித்துவிட்டது. பியூட்டி பார்லர் போகாத பள்ளிச்சிறுமிகள் இல்லை. அந்த அளவுக்கு அழகாக்கிக்கொள்வதில் பலரும் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டனர்.

மாதம் பல ஆயிரம் வரை செலவழிப்பவர்களும் உண்டு. அதனால், சந்தையில் கண்ட கண்ட ஆயில்கள், ஷாம்பூக்கள் குவிந்து வருகின்றன. தரமான பொருட்களை வாங்கி பயன்படுத்த முடியாதவர்கள், இந்த தரம் குறைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் வரும் ஆபத்து குறித்து யாரும் கவலைப்படுவதில்லை.

புரிந்து கொள்ளுங்கள்

உங்கள் முடி, ஆயில் முடியா, வறண்ட முடியா என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்? இதோ எளிய வழி. ஒரு "பிளாட்டிங்" பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். தலைமுடியில் மிதமாக அழுத்தி, ஒரு நிமிடம் வரை வைத்திருங்கள். இப்போது எடுத்துப்பாருங்கள்; பேப்பரில் பிசுபிசுப்புடன் ஆயில் தன்மை இருந்தால், உங்கள் முடியில் ஆயில் தன்மை அதிகம் இருக்கிறது என்று பொருள். அப்படியில்லாமல், பேப்பரில், தலைமுடியின் காய்ந்த பகுதியின் துகள்கள் இருக்குமானால், உங்கள் தலைமுடி, வறண்ட தன்மை கொண்டது.

நீண்ட கூந்தலா?

நீங்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் பணியாற்றுகிறீர்கள் என்றால், உங்களால், தலைமுடியை பராமரிக்க போதுமான நேரம் இருக்காது. அதனால், தோளில் பரவும் வகையில் தலைமுடியை குறைத்துக்கொள்ளலாம். முடியை எப்போதும் "ட்ரிம்" செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், வறண்டுபோய் விடும். கூந்தலுக்கு ஏற்ற ஷாம்பூ, கண்டிஷனரை பயன்படுத்த தெரிய வேண்டும்.

கலரிங் கொடுமை

ஆண், பெண்களில் கலரிங் என்ற பெயரில் பெரும் கொடுமை நடக்கிறது. தரம் குறைவான பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்தவே கூடாது. ஆரம்பத்தில், முடியை பார்க்க பேஷனாகத்தான் இருக்கும். போகப்போக, கேவலமாக போய்விடும்.

எந்த சத்து தேவை?

முடிக்கு எந்த சத்துக்கள் தேவை தெரியுமா? ஒன்று; இரும்புச்சத்து. மற்றது; புரோட்டீன். இந்த இரண்டும் மிக முக்கியமானவை. இவற்றில் குறைபாடு இருந்தால், தலைமுடி கொட்டும்; ஆண்களுக்கு வழுக்கை ஏற்படும். சிலர் குண்டாக இருந்தாலும், ரத்தசோகை இருக்கும். அதுபோல, சிலருக்கு புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும். இவர்களுக்கு முடிகொட்டுவதை வைத்தே இதை தெரிந்து கொள்ளலாம். அதுபோல, ரத்தத்தில் "பெர்ரட்டின்" அளவை வைத்தே, ரத்த சோகை அளவை கண்டுபிடிக்கலாம்.

அழகு குறிப்புகள்

Site Meter