குளு குளு டிப்ஸ்...
கோடைக்காலம் துவங்கி எங்கு சென்றாலும் அனல் காற்று அடிக்கிறது. இதனால் சருமமும், தலை முடியும் கோடைக் காலத்தில் அதிகமாக பாதிக்கப்படும்.
கோடைக்கு என சில விசேஷ கவனிப்புகளை நாம் செய்ய வேண்டியதிருக்கும். இல்லையெனில் இந்த கோடை முடிவதற்குள் நமது சருமமும், தலை முடியும் அதன் ஆயுளை முடித்துக் கொள்ளும்.
எனவே உங்களுக்காக கோடைக்கேற்ற சில குறிப்புகள் இங்கே...
வெயியிலில் சருமம் கருக்காமல் இருக்க...
குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விடவும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலில் சருமம் கருப்பாகாமல் இருக்கும்.
உடல் சூடு தணிய...
தயிரில் ஊற வைத்த வெள்ளரித் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சூடும் குறையும்.
கண் கருவளைம்...
கோடையில் தூக்கம் பாதித்து கண்களில் கருவளையம் ஏற்படாமல் தவிர்க்க, விளக்கெண்ணெயில் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி, சிறிது உப்பு ஆகியவற்றைக் கலந்து கண்களைச் சுற்றித் தடவி வந்தால் கருவளையும் காணாமல் போகும்.
துர்நாற்றம் போக...
குளிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு வெப்பமூட்டி அந்த நீரில் குளித்து வந்தால் வேர்வை நாற்றம் குறையும்.
கண்களைக் காக்க...
வெளியில் காயும் அனல் உங்கள் கண்களை பாதிக்காமல் இருக்க வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களுக்கு மேல் வைத்துப் பத்து நிமிடம் அமர்ந்திருங்கள். கண்கள் மெருகேறும்.
கூந்தல் பராமரிப்பு...
வாகனத்தில் போகும் போது தலையில் ஸ்கார்ப் அல்லது தொப்பியாவது அணியுங்கள். அடி முடியில் வெயில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இரவில் மீதமிருக்கும் சாதத்தில் ஊற்றி வைத்திருக்கும் நீரைக் கொண்டு காலையில் உங்கள் கூந்தலை அலசுங்கள். கவிபாடும் உங்கள் கூந்தல்.
அழகு குறிப்புகள்
- தோல்களிலுள்ள அழுக்கை நீக்கணுமா?
- மேனியை மெருகூட்ட!
- மாசு மருவற்ற முகம் வேண்டுமா?
- முகப் பொலிவிற்கு!
- முகத்தில் முடிகளை நீக்க வேண்டுமா?
- கண்களை அலங்கரியுங்கள்!
- எண்ணெய் சருமத்தால் உங்கள் அழகு பாதிக்கப்படுகிறதா?
- முடி ஏன் உதிர்கிறது?
- நகத்திற்கு இயற்கை மருதாணியே சிறந்தது!
- புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு...






