முதல் பக்கம் » பெண்கள் » குழந்தை வளர்ப்பு » குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம்...!

Mother and child

-

குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம்...!

குழந்தை வளர்ப்பு:குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம்...!

எஸ். நர்மதா - Thursday, September 14, 2006
Mother and child - Child Care Tips and Informations in Tamil

தாய்ப்பால் வாரம் தொடர்பாக கருத்தரங்குகள் என்று பல வகையில் நடந்தாலும், எத்தனை பேர் இன்னமும் டாக்டர்கள் சொல்கிறபடி தாய்ப்பால் மகத்துவம் புரிந்து நடக்கின்றனர் என்பது கேள்விக்குறி தான்.

குழந்தை பிறந்த உடனே தரப்படுவது சீம்பால். இது வேறு ஒன்றுமில்லை, குழந்தைக்கு தாய் கொடுக்கும் முதல் "தாய்ப்பால்". சீம் பாலில் நோய் தடுப்பு ஆற்றல் அதிகம் உண்டு.

* குழந்தை பிறந்தது முதல் 6 மாதம் வரை கண்டிப்பாக தர வேண்டும்.

* குழந்தைக்கு எளிதில் ஜீரணமாக கூடிய சத்தான உணவு தாய்ப்பால்.

* தாய்ப்பாலில் நுண்ணுயிர் கிருமிகள் காணப்படுவதில்லை.

* தாய்ப்பாலில் வெப்பநிலை சீராக இருப்பதால் குழந்தையால் எளிதில் உட்கொள்ள முடியும்.

* தாய்ப்பால் கொடுப்பதன் மூலம். தாய்க்கு பிரசவத்திற்குப் பின் ஏற்படும் உதிரப்போக்கை தடுக்கலாம்.

* தாய்ப்பால் கொடுப்பதனால் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

* தாய்ப்பால் கொடுப்பதனால் ஏற்படும் ஹார்மோனல் மாறுதலால் அடுத்த கர்ப்பத்தை தள்ளிப் போடலாம்.

6 மாதத்திற்குப் பிறகு:

ஆறு மாதத்திற்கு பிறகு, தாய்ப்பாலுடன் இணையுணவை அறிமுகப்படுத்த வேண்டும். இணையுணவின் அளவை சிறிது சிறிதாக அதிகப்படுத்த வேண்டும். இணையுணவை முதன் முதலில் கொடுக்கும் போது திரவ நிலையிலோ, மிதமான திட உணவாகவோ கொடுக்க வேண்டும். வேக வைத்து மசித்த உணவு வகைகளை தினமும், 3 முதல் 5 முறைகள் கொடுக்கலாம்.

ஒரு வயதிற்கு பின்:

தாய்ப்பாலை, தொடர்ந்து 2 வயது வரை கொடுக்க வேண்டும். வீட்டில் எல்லாருக்கும் தயாரிக்கப்படும் உணவையே குழந்தைகளுக்குத் தரலாம். தினமும் 3 & 5 முறை உணவு தரப்பட வேண்டும். தாய் அருகில் அமர்ந்து குழந்தை தானே சாப்பிட உதவ வேண்டும். தீமை தரும் உணவுகள், புட்டிபால், பால்பவுடர், கடைகளில் விற்பனையாகும் பலவிதமான மாவு வகைகள், பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தாய்ப்பால் கொடுக்காமல் புட்டிப்பாலோ, மாட்டுப்பாலோ, பவுடர்பாலோ, அல்லது பாக்கெட் பால் குழந்தைக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சுவாச நோய்கள், இன்பெக்ஷன், உடல் பருமன் போன்றவை வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, அவற்றைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

குழந்தை வளர்ப்பு

Site Meter