தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் கவனத்திற்கு...
உலகிலேயே குழந்தைகளுக்கு ஏற்ற... சத்தான... கலப்படம் இல்லாத சுத்தமான ஒரே உணவு தாய்ப்பால் தான். அதை புகட்டும் "தாய்"மார்கள் முதலில் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை சரியாக புகட்ட முடியும்.
தாய்ப்பாலில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டீன், கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் போன்ற அனைத்து வகையான உயிர்ச் சத்துக்களும் உள்ளன. அதனால் தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் மட்டுமே குழந்தைகளுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.
முதலில் நீங்கள் சத்தான... ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். அதிகப் புரத உணவுகள், பயறு வகைகள், பால், முட்டை, கீரை, பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். சுறாப் புட்டும், வெள்ளைப் பூண்டும் அதிகமாக சாப்பிட்டால் பால் அதிகமாக சுரக்கும். கிழங்கு வகை உணவுகளை குறைவாக சாப்பிடவும்.
அதிகமான காரம், மசாலா சேர்த்த உணவுகளை தவிர்க்கவும். எண்ணையில் பொரித்தவை மற்றும் எசன்ஸ் மற்றும் ரசாயனக் கலவை உணவுகள்... குறிப்பாக பாஸ்ட் புட் உணவுகளை சாப்பிடக் கூடாது. முக்கியமாக குளிர்பானங்களை சாப்பிடவே கூடாது.
ஓட்டல்களில் பிரியாணி மற்றும் சிக்கன் 65 போன்ற நான்வெஜ் அயிட்டங்களை சாப்பிட வேண்டாம். ஐஸ்க்ரீம், மில்க்ஷேக் போன்ற அயிட்டங்களையும் சாப்பிட வேண்டாம். குறிப்பாக சீதாப் பழத்தை தொடவே வேண்டாம்.
சில நேரங்களில் வேறு காரணத்திற்காக அதாவது... ஈரம் மற்றும் இறுக்கம் காரணமாக குழந்தைகள் அழலாம். பசிக்காகத் தான் குழந்தை அழுகிறது என்பதை அறிந்து பால் கொடுக்கவும்.
குறிப்பிட்ட சில மணி நேரத்திற்கு ஒரு முறை என்று நீங்களாகவே கணக்கிட்டு பால் கொடுக்க வேண்டாம். குழந்தை பசிக்காக அழுதால் கணக்கில்லாமல் பால் கொடுக்கவும்.
மார்பகப் புற்று நோய் உள்ளவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.
எய்ட்ஸ், எச்.ஐ.வி. பாஸிட்டிவ் ஹெபடைட்டிஸ் ஏ, பி, குஷ்டம், காலரா, வெறிநாய்க் கடியால், அல்லது ரேபிஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகப்படியான காய்ச்சலில் அவதிப்படுபவர்கள் ஆகியோரும் குழந்தைக்கு தாய்ப்பால் தரக்கூடாது.
மன நோயால் பாதிப்படைந்த பெண் தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு பாதிப்பு ஒன்றும் ஏற்படாது.
தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகம். குறிப்பாக முதல் நான்கு நாட்களுக்கு கொடுக்கும் சீம்பால், மூளைக்காய்ச்சல், போலியோ, வயிற்றுப் போக்கு, மலேரியா போன்ற நோய்களை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது.
தாய்ப்பால் அதிகமாக கொடுக்கும் தாய்மார்களுக்கு பிற்காலத்தில் அவர்களுக்கு மார்பகப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு.
குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மன நிம்மதியுடன்... வசதியாக அமர்ந்து கொடுத்தால் பால் சுரப்பு அதிகமாகி... குழந்தைக்கு திருப்தியாக பால் கிடைக்கும். சில குழந்தைகள் பால் குடித்தபடி தூங்கிவிடும். அப்போது மார்பு காம்பிலிருந்து வெடுக்கென்று குழந்தையின் வாயை எடுக்கக் கூடாது. மெதுவாக எடுக்கவும்.
ஒவ்வொரு குழந்தையும்... ஒவ்வொரு முறையும் பால் குடிக்கும் அளவு மாறும். எவ்வளவு பால் குடிக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் குழந்தை பால் குடித்தவுடன் நன்கு தூங்கினாலோ, ஆரோக்கியமாக இருந்தாலோ...சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தாலோ... குழந்தையின் உடலமைப்பில் வித்தியாசம் தெரிந்தாலோ... குழந்தையின் எடை கூடினாலோ... குழந்தைக்கு தேவையான பால் கிடைக்கிறது என்று அர்த்தம்.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், தாய்ப்பால் குடிக்காத குழந்தையின் மூளை வளர்ச்சி குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தை வளர்ப்பு
- குழந்தைகளுக்கேற்ற மேக்-அப்!
- குழந்தையும் பொம்மையும்
- மாதம் தோறும் குழந்தையின் வளர்ச்சி!
- குட்டீஸ்களில் உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றியமையுங்கள்!
- குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள்....
- குழந்தைகளின் மனதுக்குள்ளே....
- குழந்தையை தூங்கவைக்க.....
- உங்கள் குழந்தை ஒல்லியா இருக்கா? கவலைப்படாதீங்க.....
- குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அவசரப்படாதீங்க...
- குழந்தை வளர்ப்பில் அப்பாக்களும் பங்கெடுத்துக்கலாமே...






