முதல் பக்கம் » பெண்கள் » சமையல் » குல்ஃபி

Kulfi - Kulpi Ice Cream - Indian Popular Ice Cream

-

குல்ஃபி

சமையல்:குல்ஃபி

கூடல்.காம் - Friday, March 11, 2005
Kulfi - Kulpi Ice Cream - Indian Popular Ice Cream - Cooking Recipes in Tamil


பால் - 2 லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
முந்திரி - 20
பாதாம் - 20
ஸ்வீட் பிரெட் - 4 துண்டங்கள்
ஜெலட்டின் - 2 டீஸ்பூன்
(சர்க்கரை போல இருக்கும்)
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பிரெட் துண்டங்களின் ஓரங்களை நீக்கிவிடுங்கள். பாலை அடுப்பில் வைத்து, பாதியாகும்வரை நன்கு காய்ச்சுங்கள் பின்னர் சர்க்கரை சேருங்கள். சர்க்கரை கரைந்து, மீண்டும் கொதிக்கும் போது, பிரெட்டை உதிர்த்துச் சேருங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

பாதாமை, கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு எடுத்து, தோலை உரித்தெடுங்கள். முந்திரி, பாதாமை சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்த்து நன்கு அரையுங்கள். அரைத்த விழுதைக் காய்ந்த பாலில் சேருங்கள். கால் கப் தண்ணீரில் ஜெலட்டினைக் கரைத்து, பால் கலவையில் சேருங்கள். ஏலக்காய்த் தூளையும் கலந்து கொள்ளுங்கள். ஆறியதும், குல்ஃபி மோல்டுகள் அல்லது கிண்ணங்களில் ஊற்றி, ஃப்ரீஸரில் வைத்து, நன்கு குளிர்ந்ததும் பரிமாறுங்கள்.

சமையல்

Site Meter