முதல் பக்கம் » பெண்கள் » சமையல் » நெல்லிக்காய் துவையல்

Nellikai Thuvaiyal

-

நெல்லிக்காய் துவையல்

சமையல்:நெல்லிக்காய் துவையல்

கூடல்.காம் - Thursday, July 14, 2005
Nellikai Thuvaiyal - Cooking Recipes in Tamil

தேவையான பொருட்கள்:-

நெல்லிக்காய் - 1 கிலோ
கடுகு - 3 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
மிளகாய்தூள் - சிறிதளவு
எலுமிச்சம் பழச்சாறு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - தேக்கரண்டி
எண்ணை - 1 மேஜைகரண்டி
உப்பு - சிறிதளவு

செய்முறை:-

நெல்லிக்காயை ஆவியில் 10 நிமிடங்கள் வேக வையுங்கள். பிறகு அவற்றை எடுத்து ஆறவிட்டு, லேசாக அழுத்தினால் துண்டுகளாகப் பிரிந்து கொட்டை வெளியே வந்து விடும். வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்து, நன்றாக பொடிக்க வேண்டும். எண்ணையை காயவைத்து, கடுகு தாளித்து, நெல்லிக்காய் துண்டுகளைச்சேருங்கள்.

அத்துடன் மஞ்சள்தூள், உப்பு, சேர்த்து 5 நிமிடங்கள் வதக்க வேண்டும். பிறகு மிளகாய்த்தூள், வறுத்து பொடித்த தூள், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து, 5 நிமிடங்கள் நன்றாகக் கிளறி இறக்க வேண்டும்.

சமையல்

Site Meter