முதல் பக்கம் » பெண்கள் » சமையல் » பிரட் கட்லட்

Bread cutlet

-

பிரட் கட்லட்

சமையல்:பிரட் கட்லட்

கூடல்.காம் - Thursday, October 13, 2005
Bread cutlet - Cooking Recipes in Tamil

தேவையான பொருள்கள்:-

சால்ட் பிரட் பெரிய சைஸ் - 6
உருளை கிழங்கு வேகவைத்து உதிர்த்தது - 3 கப்
கேரட், பீட்ரூட் துருவியது - 2 கப்
மஞ்சள் பொடி, காரட் பொடி, கரம் மசாலா, உப்பு - தேவையான அளவு
தயிர் (புளிப்பில்லாதது) - 3 கப்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
கொத்துமல்லி பொடியாக நறுக்கியது - 1/2 கப்
சீரகப்பொடி - 1ஸ்பூன்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

செய்முறை:-

முதலில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, சிரகம் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்கவும். பட்டாணி, கேரட், பீட்ரூட் துருவல் சேர்த்து மிதமான தீயில் வதக்கி சிறிது நேரம் மூடிவைக்கவும். பின்பு கரம் மசாலா, காரப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு இவைகளை சேர்த்து நன்றாக வதக்கியவுடன் உதிர்த்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பிரட்டை தண்ணீரில் நனைத்து இரண்டு கைகளுக்குகிடையே வைத்து நன்றாக பிழியவும்.

இரண்டு பிரட்டிற்கு இடையிலோ அல்லது ஸ்லைஸின் நடுவிலோ காய்கறிகளை வைத்து நன்கு மூடி வைக்கவும் தேவைக்கேற்ற வடிவத்தில் (உருண்டையாகவோ, தட்டையாகவே செய்து, எண்ணெயில் சிவக்கும் பதத்தில் பொரித்தெடுக்கவும்).

தயிரில் சர்க்கரைச் சேர்த்து நன்றாகக் கடைந்து பொரித்து வைத்திருக்கும் கட்லெட் மீது இரண்டு டீஸ்பூன் அதன் மேல் சீரகப் பொடி கொத்துமல்லி தூவி பரிமாறவும்.

சமையல்

Site Meter